gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

திருஞான சம்பந்தர்

Written by

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
சீர்காழியில் சிவபாத விருதயர் தன் மனைவி பகவதியுடன் தினமும் தங்களுக்கு சைவநெறி தழைத்திடும் வண்ணம் ஒர் குழந்தை வேண்டுமென பிரார்த்தித்து பெருமான் அருள் புரிய ஆண்குழந்தையை பெற்றனர். குழந்தை வளர்ந்தது. சம்பந்தருக்கு ஆண்டுகள் இரண்டு முடிந்தது. நாள் தோறும் சிவபாத இருதயர் தோணிபுரத்தே உள்ள நீர்நிலையில் நீராடி கழுமலநாதனை நித்தமும் வணங்கியபின் தன் இல்லத்தில் உள்ள மற்ற பணிகளைப் பார்ப்பார்.
வழக்கம்போல் அன்றும் நீராட சிவபாத இருதயர் கிழம்ப குழந்தை தானும் வருவேன் என அடம்பிடித்தது. மகனை உடன் அழைத்துச் சென்றார். மைந்தனைக் குளக்கரையில் இருக்கச்செய்து குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி குளிக்க ஆரம்பித்தார். தந்தையைக் காணவில்லை என குழந்தை குரல் கொடுக்க, அழுதகுரல் கேட்டு திருத்தோணிபுரத்துறையும் பெருமான் விண்ணிருந்து மண்ணிற்கு வந்த குழந்தைக்கு உண்ண அமுதுடன் சிவஞானம் கொடுக்கச் சொன்னார். பிராட்டியும் பொற் கிண்ணத்தில் இன்னமுதப்பால் பெய்து சிவஞானம் குழைத்து எடுத்து ஊட்டினார். குழந்தையின் அழுகை நின்றது.
குளித்து முடித்த தந்தை குளக்கரையில் தம் புதல்வன் எச்சில்பால் உண்டவாயும் கையிற் பொற்கிண்ணமுமாக இருப்பது கண்டு சினந்தார். அருகிருந்த சிறுகோல் எடுத்து யார் கொடுத்தது என அடிக்க கை ஓங்கினார். குழந்தை தலைக்குமேல் விரல் ஒன்றினால் பரம்பொருளைச் சுட்டிகாட்டி 'சிறப்பதோடுடைய செவியன்’ எனத்தொடங்கி பதிகம் பாடினார்.
நான் கூறப்போகின்ற நெறி இருக்கின்றதே அது சிவனடியே சிந்திக்கும் ஒரு நெறி. அது திருநெறி. அதுவும் தமிழ்நெறி. தமிழர்தம் வாழ்வியல் நெறி. இந்த திருநெறிய தமிழ் வல்லர் தொல்வினைதீரும். என்றார். ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்றார். நம் தமிழ் சமுதாயத்திற்கு சிவனடி பரவும் ஒருநெறியே என் திருநெறி என்றார்.
சிவதலங்களில் வழிபாடு நடத்த விரும்பினார். 3 வயது குழந்தையை தன் தோளில் தூக்கிக்கொண்டு திருகோலக்க என்ற தலத்திற்கு சென்றார் சிவபாத இருதயர். ஞானசம்பந்தன் இறைவனை ‘மடையில் வாளை பாய’ என்ற பாடலை பாட கைத்தாளமிட்டதால் கைசிவக்க இறைவன் பொற்றாளம் கொடுக்க அன்னை ஓசை கொடுத்த நாயகியாக உலகெலாம் வியக்க தாளம் பெற்று பாடல் பாடினார். அப்படியே நனிபள்ளி சென்று வழிபட்டு சீர்காழி வந்தார்
ஞானசம்பந்தன் புகழ்கேட்டு திருநீலகண்டயாழ்ப்பாணர் தன் துணைவி மதங்க சூளாமணியுடன் வர அவர்களை வரவேற்று இறைமுன் பதிகம் பாட பாணர் யாழ் இசைத்தார், தீண்டத்தக்காதவராய் இருந்த பாணரை ஞானசம்பந்தன் தம்முடன் யாழ் இசைக்க வைத்துக் கொண்டார். அவரை அழைத்துக்கொண்டு தில்லை சென்றார். வழியில் பாணர் ஊராகிய எருக்கத்தம்புலியூர் சென்றார், கொளுத்தும் வெய்யிலைப் பாரது மாறன்படி என்ற ஊரை அடைந்தார். பெருமான் அந்த ஊர் அடியார் கனவில் தோன்றி ஞானசம்பந்தன் என்பால் அனைகின்றான், அவனுக்கு முத்துச்சிவிகை மணிக்குடை சின்னம் அளியுங்கள் என்றார்.
பலதலங்களில் பதிகம் பாடி வழிபட்டு மீண்டும் சீர்காழி வந்தார். எழாம் ஆண்டில் ஞானசம்பந்தனுக்கு பூணூல் அணிவிக்க அந்தனர்கள் மந்திரம் சொல்ல ஞானசம்பந்தர் சொல்லவேண்டிய மந்திரம் ஐந்தெழுத்து என்றார். அப்பரடிகள் தன்னைக் காணவருகின்றார் என்பதை அறிந்த ஞானசம்பந்தர் எதிர்கொண்டழைத்தார். சிலகாலம் அங்கிருந்து அப்பரடிகள் சோழ நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.
ஞானசம்பந்தர் திருத்தலப்பயணமாக திருப்பாச்சிலாசிரமம்- திருவாசி சென்றார். கோவிலில் மங்கை பருவம் எய்திய பெண் ஒருத்தி உணர்ச்சியற்ற நிலையில் இருப்பதைக் கண்டார். அவர் கொல்லிமழவன் என்ற குறுநில மன்னனின் மகள். அவள் பிணியை இறைவன் தீர்க்க கோவிலில் வைத்திருந்தார். ஞானசம்பந்தர் பதிகம் பாடி நோய் தீர்க்க வழவனும் அவளும் அடிவணங்கினர். திருக்கொடிமாடசெங்குன்றூர்- திருச்செங்கோடு சென்றார். அப்போது பனிக்காலமாகையால் அடியவர்கள் சிலர் அவதிபட்டனர். அங்குள்ள மடம் ஒன்றில் தங்கி அர்த்தநாரீஸ்வரர் மீது ‘வெந்த வெண்ணீறணிந்து’ என்ற பதிகம் பாடினார்.
பலதலங்களை வழியில் வழிபட்டு திருப்பட்டீச்சுரம் அடைந்தார். அங்கு பூதகணங்கள் ஞானசம்பந்தர் தலைமீது முத்து பந்தலை பிடித்தனர், பின்னர் அடியவர்களிடம் கொடுத்து மறைந்தனர். பட்டீசுவரை வணங்கி திருவவடுதுறையை அடைந்து தங்கினார். அப்போது அங்குவந்த சிவபாத இருதயர் வேள்வி செய்ய பொருள் வேண்டும் என ஞானசம்பந்தரிடம் கேட்டார். திருவாவடுதுறையானைப் பதிகம் பாடி 1000 பொற்காசுகள் பெற்று தந்தையாரிடம் கொடுத்தார். தலங்களைவழிபட்டு தருமபுரம் வந்தார். அங்கு ஞானசம்பந்தர் பாணர் வேண்டுகோளுக்கு இணங்கி யாழ்கருவியில் அடங்காத பாசுரம் பாடினார்.
சாத்த மங்கை என்னும் தலத்திற்கு சென்றார். அந்தஉரின் நீலநக்கர் ஞானசம்பந்தரை தன் குருவாக நினைத்திருந்தார். இவர் வருகிறார் என்ற செய்தி அவருக்கு பரவசமூட்டியது. ஞானசம்பந்தர் கோரிக்கையை ஏற்று பாணரை தம்முடைய வீட்டிலேயே தங்கவைத்தார். அங்கு சிலநாள் தங்கி திருநாகைக் காரோணமுடையாரை வணங்கி திருச்செங்காட்டாங்குடி நோக்கித் தன் பயணம் தொடர்ந்தார். பரஞ்சோதியார் என்ற சிறுதொண்டர் ஞானசம்பந்தர் வருகையை எதிர்பார்த்து வணங்கி வழிபாடு செய்தார். சிறுத் தொண்டரிடம் விடைபெற்று திருமருகல் ஆலயம் சென்றார்,
அது நள்ளிரவு நேரம். ஓர் அணங்கையின் அழுகுரல் கேட்டது. அதிகாலை எழந்து நீராடி அழுகுரல் வந்த திசையில் சென்றார். அங்கு ஒருவன் இறந்திருந்தான். அருகே ஒர் பெண் அழுது கொண்டிருந்தார். அவள் வைப்பூரிலுள்ள தாமன் செட்டியாரின் மகள். அவருக்கு மொத்தம் ஏழு பெண்கள். இறந்தவன் தாய் மாமன். மாமனிடம் பெரும் பொருள் பெற்று மூத்தவளை மணம் முடித்து தருகின்றேன் எனக்கூறி வேறு ஒருவருக்கு மணம் முடித்தார். இப்படியே அறுவருக்கு மணம் முடிந்து எனக்கும் அதேபோல் தந்தை செய்ய முடிவு செய்தது தவறு என்பதால் நான் மாமனுடன் வந்தேன். இரவில் நாகம் தீண்ட மாண்டான். இது என்ன நியாயம் என்று புலம்பினாள்.
இறந்தவரை உயிர்பிப்பது என் வேலையல்ல. இருந்தாலும் இப்பெண்ணிற்காக நீதி கேட்டார் இறைவனிடம். பதிகம் பாடினார். இறந்தவன் உயிர்பெற்றான். அங்கு சில காலம் தங்கியிருந்து வழிபாடு செய்தார். திருப்புகழூர், வர்த்தமானிச்சுரம் சென்றார். வர்த்தமானச்சுரத்து பெருமானை வணங்கி முருகரையும் சேர்த்து பதிகம் பாடி அவருடைய மடத்தில் தங்கினார். ஞானசம்பந்தர் திருப்புகலூரில் இருக்கிறார் என அறிந்து அப்பரடிகள் வந்தார். இருவரும் சேர்ந்து பயணம் செய்ய விரும்பினர். அம்பர்மாகாளம் வணங்கி திருக்கடவூர் செல்ல குங்குலிய கலயர் வரவேற்று வழிபாடு செய்தார். பின் திருவீழிமிழலை சென்றனர்.
அங்கு சீர்காழியிலிருந்து வந்த அடியார்கள் ஞானசம்பந்தரை சீர்காழிக்கு அழைக்க அவர் அங்கு சென்று இறைவனை தரிசிக்க விரும்பினார். ஆனால் அன்று இரவு கனவில் பெருமான் நாளை காலை திருத்தோணிபுரத்து பெருமாட்டியோடு காட்சியை விண்விழி விமானத்தே காண்பாய் என அருளினார், அதிகாலை நீராடி அக்காட்சியை கண்டு ஆனந்தம் அடைந்தர். அந்த ஊரில் அப்போது பஞ்சம் ஏற்பட்டது.
பெருமான் இருவர் கனவில் தோன்றி. நாட்டில் நடக்கும் உலகியல் நிகழ்ச்சியால் அடைந்த தீய பசி உம்மையடையாதெனினும் உம்பால் நிலவும் அடியோர் வாட்டம் அடையாவண்ணம் நாளும் ஓர் பொற்காசு கிழக்கும் மேற்குமாக பலிபீடத்தில் தருவோம் என்றார், இருவரும் தம் கனவை பரிமாறி பொற்காசு பெற்று இருமடங்கள் அமைத்து அடியார்களுக்கு உணவு அளித்தனர். நாவுக்கரசர் மடத்தில் உணவு முடியும்போதுதான் சமபந்தர் மடத்தில் ஆரம்பிக்கும். ஏன் இந்த காலதாமதம் என்றார் ஞானசம்பந்தர்,
அது நல்ல காசு தாங்கள் கொடுக்கும் காசு மாற்று குறைந்தது. அதனால் பொருள் வாங்க சிறிது காலதாமதம் ஆகிறது என்றனர். ஞானசம்பந்தர் வீழிநாதன்முன் சென்று தமக்கும் மாசில்லா காசு கேட்டார். ஆரூரர் திருவீழிமிழலை வந்து அப்பருக்கும் ஞானசம்பந்தருக்கும் பொன் கொடுத்து என்னை ஏமாற்றமுடியாது. நீர் ஏன் பொன் கொடுத்தீர் என்று எனக்குத்தெரியும் என பாடினார்.
இருவரும் திருமறைக்காடு சென்றனர். வேதம் மறைக்காடாரை வணங்கி கதவை மூடியதால் அடியவர்கள் மாற்று வழியில் உள்ளெ சென்று வழிபாடு செய்வதைப் பார்த்த ஞானசம்பந்தர் அப்பரடிகளிடம் மறைக்கதவு திறக்க பாடச்சொல்ல அவரும் பத்து பாடல்கள் பாட கதவு தாள் திறந்தது. வழிபாடு முடிந்ததும் அப்பரடிகள் ஞானசம்பந்தரிடம் கதவை மூடவும் பின் திறக்கவும் பதிகம் பாடச்சொல்ல அவர் ஒருபாடல் பாடியவுடன் கதவு மூடியது. தான் பாடிய 10வது பாடலுக்கு திறந்த கதவு ஞானசம்பந்தர் பாடிய முதல் பாட்டிற்கே மூடியது மனதில் நினைத்து இறைவன் திருக்குறிப்பை அறியாமல் தவறு செய்தோமோ என வருந்தினார். பெருமான் அடியார்வேடத்தில் தோன்றி நாம் வாய்மூரில் இருப்போம் நம்மைப்பின் தொடர்ந்து வாரும் என்றார். அப்பரடிகள் பின் தொடர அண்மையில் இருப்பது போல தோன்றி மறைந்தார்.
ஞானசம்பந்தர் எழுந்து அப்பரடிகள் வாய்மூர் சென்றிருப்பதை அறிந்து தாமும் சென்றார். அவரக் கண்டவுடம் அப்பரடிகள் மகிழ்ந்து, வாய்மூர் பெருமானே உன் சதிர் ஆட்டம் என்னிடம் செல்லும், மறைக்கதவம் திறக்கப்பாடிய என்னைவிட உறுதி பொருள் பாடி அடைப்பித்த ஞானசம்பந்தர் உம் எதிர் நிற்கிறார் உம்மை மறக்கும் வல்லமை உமக்கு உண்டா உன் அருட் காட்சியைக் காட்டு எனப் பாடினார். வாய்மூரில் சில நாள் தங்கி திருமறைக்காடு சென்றனர்.
பாண்டிய நாடு சமண நெறியில் சிறந்திருந்தது. மன்னன் கூன் பாண்டியன் சமணத்தைச் சார்ந்தான். அவரின் மனைவி மங்கையர்கரசி மற்றும் அமைச்சர் குலச்சிறையார் இருவரும் சைவம் காத்தனர். அவனது துணைவியார் அமைச்சரின் உதவியுடன் ஞானசம்பந்தர் திருமறைக்காட்டிலிருப்பதை அறிந்து அவர் தங்கள் நாடு வரக் கேட்டனர். அப்பரை சோழநாட்டு திருத்தலங்கள் செல்லக்கூறி தாம் பண்டிநாடு என்றார்.
வழியில் அகத்தியான் பள்ளி, கோடிக்குழல் ஆகிய தலங்களை வணங்கிச் சென்றார். திருக்கொடுங்குன்றத்து இறைவனை வாணங்கி மூதூர் வந்தார். குலச்சிறையார் எதிர்கொண்டழைத்தார். ஆலவாய் கோபுரம் கண்ட ஞானசம்பந்தர் மங்கையர்கரசியாரையும், ஆலவாய் ஈசனையும் குலச்சிறையரையும் இனைத்து பதிகம் பாடினார். ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு மன்னன் சம்மதத்துடன் சமணர்கள் தீ மூட்டினர். அவர்கள் செய்தது மன்னவனைச் சாரும் என்றும் ‘தீபையவேசெல்க’ என்றார். காலையில் மன்னவனால் எழுந்திருக்க முடியவில்லை. நோயின் தாக்கத்தால் சைவ நெறியை நாடினான்.
ஞானசம்பந்தர் அடியவர்களுடன் ஆலவாய்சென்று பெருமானை வழிபட்டு மன்னனைக் காணச்சென்றார். சமணர்கள் வாது செய்யலாம் என்றனர். மன்னனோ என் பிணியை யார் நீக்குகின்றீகளோ அவர் பக்கம் நான் இருப்பேன் என்றான். சமணர்கள் நாங்கள் ஒரு பக்கம் நீக்குகின்றோம் மறுபக்கம் அவர் நீக்கட்டும். அவரால் குணமடைந்தாலும் எங்களால் குணமடைந்ததாக கூறவேண்டும் எனக் கூறினர். மன்னன் அதற்கு இசையவில்லை. இடதுபுறம் மன்னனின் வெப்பு நோயையைத் தீர்க்க சமணர்கள் மந்திரம் ஓதியும் மயிற்பீலி கொண்டும் செய்த முயற்சி பலிக்கவில்லை. கூன் பாண்டியனுக்கு சூலை நோய் தாக்கியதை சமணர்களால் சரி செய்ய முடிவில்லை. அந்த மந்திரநீர் சுட்டது.
வலப்புறம் ஞானசம்பந்தர் திருநீறு எடுத்து ‘மந்திரமாவது நீறு’ எனப்பதிகம் பாடி தன் திருக்கரத்தால் தடவினார். அவர் கைபட்டதும் உடல் நோய் வலப்பக்கம் தீர்ந்து சொர்க்கமாகவும் இடப்பக்கம் நரகமாகவும் இருக்க கண்ட மன்னன் இடது புறமும் தாங்களே குணமாக்க வேண்டும் என வேண்டினான். மன்னன் முற்றும் குணமடைந்தான். ஞானசம்பந்தர் இனி உங்கள் வாய்மையை பேசுமின் என்றார். வாய்வெல்ல வேண்டியதில்லை. இருதரப்பாரும் அவர்தன் சமய பெருமைகளை எழுதி அதைத்தீயிலே போட்டால் வேகாத ஏடு உண்மை சமயம் என்றனர்.
மன்னன் ஆணைப்படி தீ மூட்டப்பட்டது. ஞானசம்பந்தர் இதுவரை பாடிய பாசுரங்களை கொண்டுவரச்செய்து வணங்கி அந்த கட்டின் கயிற்றை அவிழ்த்து ஒர் ஏட்டை எடுத்தார். தளிரிள வளதொளி என பதிகம் பாடி ’போகமார்த்த பூண்முலையாள்’ என்றபாட்டினை தீயில்பொட்டு தீயில் வேகாது நிலைபெறுக என்றார். அது எரியாமல் பச்சையாக இருந்தது. அதனால் அது ‘பச்சைஏட்டு பதிகம்’ எனலாயிற்று. சமணர்கள் ஏடு தீயிலிட்டது கருகியது.
ஆனால் சமணர்கள் மூன்று முறை செய்து உண்மை காண்பதே முறை என்று ஆற்றில் ஏட்டினை விட்டு அது எதிர்த்து வந்தால் அதுவே உண்மையானது என்றனர். அப்போது குலச்சிறையார் இவ்வாதில் தோற்றால் தோற்றவர்களை மன்னன் கழுவில் ஏற்றவேண்டும் என்றதற்கு சமணர்கள் ஒப்புதல் அளித்தனர். தங்கள் மந்திரமான் ‘அஸ்திஆஸ்தி’ யை எழுதி ஆற்றில் போட்டனர் சமணர். அது கடலைநோக்கி ஓடியது. ஞானசம்பந்தர் ஓர் பதிகம் எழுதி வைகையில் போட்டார். அது எதிர்த்து வந்தது. கூன் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் ஆகினான். குலச்சிறையார் அந்த ஏட்டினை எடுத்துவந்தார். சமணர்களை கழுவில் ஏற்றிய மன்னன் தன் துணைவியருடன் சைவத்தில் இணைந்து திருத்தொண்டுகள் பல செய்தான்.
திருநீலகண்ட யாழ்பாணர் ஆலயத்தினுள் செல்லமுடியாமையால் கோவில் வாயிலில் பாடியவரை அடியவர்கள் மூலமாக தன் முன்னிருத்தி பொற்பலகையிட்டுப் பாடசெய்ததை ஞானசம்பந்தர் தம் ஆலவாய் பதிகத்தில் வியந்துள்ளார், சிலநாட்களித்து மதுரையிலிருந்து புறப்பட்டு திருப்பரங்குன்றம் திருவாப்பனூர், திருப்புத்தூர், திருக்கானப்பேர், திருச்சுழியல், திருக்குற்றாலம், திருநெல்வேலி தலங்களில் வழிபட்டு திருஇராமேசுவரம் வந்தார்.
திருஇராமேசுவரத்திலிருந்து தம் ஞானக்காட்சியால் திருக்கோணமலை, திருக்கேதீசுரம் ஆகிய இரு தலங்களையும் பதிகங்கள் பாடினார். குலச்சிறையார் பிறந்த பதியான மணமேற்குடி தங்கியிருந்தார். அங்கிருந்து திருக்களர், திருப்பாதாளீச்சுரம் தலங்களை வழிபட்டு முள்ளியாற்றின் கரைவந்தடைந்தார். ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. ஓடக்காரர்கள் ஓடத்தை கரையில் கட்டி சென்று விட்டனர். மறுகரையிலிருக்கும் கொள்ளம்புதூருக்குச் செல்ல ஓடத்தில் அடியவர்களுடன் ஏறி தன் நாவன்மையால் ஓடத்தைச் செலுத்தினார். ஆறாவது பாடலில் ஓடம் கொள்ளம்புதூரை அடைய அங்கு வழிபட்டு திருக்கடவூர் பெருமானை வழிபட்டு அப்பரடிகள் திருப்பூந்துருத்தி நோக்கிச் சென்றார்.
ஞானசம்பந்தர் வருகிறார் என்றதும் அப்பரடிகள் அடியார்களுடன் சென்று அவரின் பல்லக்கை தூக்கி வந்தார். ஞானசம்பந்தர் அப்பரடிகள் எங்கு இருக்கின்றார் என்றபோது 'உம்மடிகள் இப்போது தாங்கி வரும் பேறுபெற்றேன்’ என்றதைகேட்ட சம்பந்தர் கீழே குதித்தார். இருவரும் வணங்கினர். அப்பரடிகள் அமைத்த மடத்திலேயே தங்கி இருவரும் அருகிலுள்ள தலங்களைத் தரிசித்தனர். அப்பரடிகள் பாண்டியநாடு பயணம் மேற்கொள்ள ஞான சம்பந்தர் தொண்டைநாடு சென்றார். திருத்தில்லை, திருத்திணைநகர், திருமாணிக்குழி, திருப்பாதிரிப்புலியூர், திருவடுகூர், திருவக்கரை, திரு இரும்பை மாகாளம் முதலிய தலங்கள் சென்று வழிபட்டார். அதிகை வீரட்டானம் அப்பரடிகளுக்கு சூலைநோய் தந்து அதனை நீக்கியதலம். அங்கு வந்து வழிபட்டு திருவாமாத்தூர், திருவறையணிநல்லூர், திருக்கோவிலூர் வழியாக தலங்களை தரிசித்து அண்ணாமலை வந்தார்.
திருஅண்ணாமலையில் பதிகம் பாடி சிலநாட்கள் இருந்து பின் திருவோத்தூர் சென்றார். அங்கிருந்த சிவனடியார் பனை மரம் வளர்த்து வேனிற்காலத்தில் அடியவர்களுக்கு பயன்படும் என நினைத்தார், ஆனால் அவைகள் எல்லாம் ஆண்பனையாக இருந்தது. சமணர்கள் அவ்வடியாரிடம் உன் சிவன் ஏன் ஆண்பனையை பெண்பனையாக மாற்றக்கூடாது எனக் கேலிசெய்ததை வருத்தத்துடன் அங்கு வந்த சம்பந்தரிடம் கூறினார். ‘பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி’ என்ற பதிகம் பாடி பனைகளை பெண்பனையாக மாற்றினார்.
ஞான சம்பந்தர் காஞ்சிமாநகர் வந்தார், கச்சி நெறிக்கரைக்காடு, கச்சிமேற்றளி, திருமாற்பேறு, திருவல்லம், திருவாய்க்கோலம் முதலி பலதலங்களை வழிபட்டு திருவாலங்காடு சென்றார். புனித புனிதவதியார்’ காரைக்கால் அம்மையார்’ தலையினாலே நடந்த திருத்தலத்தை தாம் காலில் மிதிப்பது தவறு என்று ஊர் வெளியில் உள்ள மடத்தில் தங்கினார். கனவில் திருவாலங்காட்டு அப்பன் என்னை பாடமறந்தனையோ என்றார், நள்ளிரவில் பதிகம் பாடினார்.
அங்கிருந்து கண்ணப்பர் வழிபட்ட காளத்திநாதனை வழிபட்டார். அங்கிருந்து திருக்கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருபதம் ஆகிய தலங்களை நினைத்து பதிகங்கள் பாடினார். பின்னர் திருவேற்காடு வணங்கி திருவொற்றியூரில் தங்கினார். மயிலாப்பூர் சிவநேசர் சிவனடி மறவா சீலர். திருஞானசம்பந்தர்மேல் எல்லையில்லா அன்புகொண்டவர். அவரின் மகள் பூம்பாவை மங்கைபருவம் அடைந்தாள், சிவநேசர் நான் பெற்றெடுத்த பூம்பாவையும் நானும் நான் சேர்த்த பெரு நிதியும் ஞானசம்பந்தர்கே உடமை என உறுதியுடன் இருந்தார்.
ஒருநாள் பூகொய்யச் சென்ற பூம்பாவையை நாகம் தீண்ட இறந்தாள். சிவநேசர் வருத்தமுறாமல் இவள் அவரின் சொத்து. எனவே அவளை தகனம் செய்து எலும்பையும் சாம்பலையும் ஓர் குடத்திலிட்டு ஞானசம்பந்தரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். அக்கலயத்திற்கு தினமும் பூசை செய்து வந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூரில் தங்கியுள்ளார் எனத்தெரிந்து அவரை எதிர் கொண்டழைத்தார் சிவநேசர். முத்துசிவிகைமுன் வணங்கும் அவரைப்பற்றி முன்பே அடியவர்கள் மூலம் தெரிந்த சம்பந்தர் சிவிகையிலிருந்தி கிழேஇறங்கி அவருடன் மயிலை வந்தார்,
மயிலை கபாலீஸ்வரரை வணங்கி சிவநேசரிடம், உம்மாற் பெறப்பட உம்மகளது என்புள்ள குடத்தை உலகவர் அறிய கோவிலின் புறவாயிலில் கொணர்வீர் என்றார். சிவநேசரும் அவ்வாறேசெய்தார். ‘அடியார்களுக்கு அமுதுபடைத்தலும், அவர்தம் விழாக்களைக் காண்பதும், சத்தியமானால் பூம்பாவையே நீ உலகோர் வியக்க உயிர் பெற்று வருக' என பூம்பாவையை நோக்கி அழைக்கும் வகையில் பதிகம் பாடினார்.
பத்தாவது பாடலில் பூம்பாவை குடத்தினின்று எழுந்தாள் ஞானசம்பந்தரை சிவநேசரும் பூம்பாவையும் வணங்கினர். நீர் பெற்ற மகளை நான் உயிர்பித்ததால் அவள் எனக்கும் மகளாவாள் என சம்பந்தர்கூற சிவநேசர் தன் மகளை வேறு ஒருவருக்கு மணமுடிக்க விருப்பமின்றி கன்னிமடத்தே இருக்கச்செய்தார்.
ஞான சம்பந்தருக்கு 16 வயது ஆனது. சிவபாத விருதையரும் சுற்றத்தாரும் கூடி சம்பந்தரை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர். நல்லூரில் வாழ்ந்த நம்மாண்டார் என்பவரது மகளை மணம்பேசி நாள் குறித்தனர். சம்பந்தர் தோணிப்புர நாதனை வணங்கி திருமண நல்லூர் சென்றார்.
மணமேடையில் அமர்ந்தார், திருநீலநக்கர் திருமணம் நடத்திவைத்தார். முருகர், நீல்கண்டயாழ்பாணர் மற்றும் அடியார்கள் சுற்றத்தார் அனைவரும் மகிழ்ந்தனர்.
இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை என்னைச் சூழ்ந்ததே, இனி இவளுடன் சிவனடி சேர்வேன் என்று திரு நல்லூர்பெருமணம் சென்றார். அங்கு பதிகம் பாட “ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் நினது திருமணம் காணவந்தோர் யாவரும் ஈனமாம் பிறவிதீர யாவரும் இச்சோதியுனுள் வந்து சேர்மின்“என திருவாய் மலர்ந்தருளி கருவறையில் ஓர் சோதி தோன்றியது. அனைவரும் தம் மனைவியருடன் சோதியில் கலந்தபின் சம்பந்தர்
“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாய மே.”
என்று தொடங்கும் நமச்சிவாய பதிகத்தைப்பாடி தன் மனைவியுடன் சோதியில் கலந்தார்.                                                      


அந்த நால்வர்.....
2. திருநாவுக்கரசர்/3.சுந்தரர்/4.மாணிக்கவாசகர்

                                         ******

திருநாவுக்கரசர்

Written by

திருநாவுக்கரசுநாயனார் (அப்பரடிகள்)
திருநாவலூருக்கு அருகில் உள்ள திருவாமூரில் துறுக்கையர் குடி என்ற வேளாளர் குலத்து புகழனார்- மாதினியார் தம்பதியினருக்கு திலகவதி என்ற மகளும், மருள் நீக்கியார் என்ற மகனும் பிறந்தனர். திலகவதி பன்னிரண்டு வயதை அடைந்தபோது அப்போதைய வழக்கப்படி அவருக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் செய்தார்.
வேளான் குடித்தலைவரான கலிப்பகையாருக்கு தன் மகளை கொடுக்க இசைந்தனர். அப்போது வடநாட்டு மன்னன் தமிழகம் நோக்கி படையெடுத்து வருதலை அறிந்த மன்னன் கலிப்பகையாரை சேனைத் தலைவராக்கி வடவரை தடுத்து நிறுத்த அனுப்புனார். சண்டை நீண்ட நாள் நடந்தது. புகழனார் நோய்வாய்பட்டு இறக்க மாதினியாரும் உயிர் துறந்தார். பெற்றோரை இழந்த திலகவதியாரும் மருள் நீக்கியாரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி வாழ்ந்தனர்.
கலிப்பகையார் போர்களத்தில் உயிர் மாண்டார் என்ற செய்தி இவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தந்தையும் தாயும் அவருக்கு என்னை கொடுக்க இசைந்தனர். ஆதலால் என்னுயிரை அவர் உயிரோடு இசைவிப்பேன் என்றதைக் கேட்ட மருள் நீக்கியார் தந்தை தாய்க்குபின் தாயாகிய தமக்கையே நீர் உயிர் துறந்தால் உனக்குமுன் நான் உயிர் துறப்பேன் என்றார். தம்பி சாகச் சகியாது தவ வாழ்வை மேற்கொண்டார் திலகவதியார். இம்பர் மனைத்தவம் புரிந்து தம்பியரை கல்வி கேள்விகளில் சான்றோனாக வளர்த்தார். மருள் நீக்கியார் ஆரூர் அப்பன் எனக்குத் திலகவதி தாயாரைத் தந்தான் என்றார்.
தமிழகத்தில் சமணம் தழைத்தோங்கிய காலம். நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கையல்லேன் எனத் தேர்ந்து கொல்லாமை மறைந்தொழுகும் சமணசமயம் சார்ந்தார். சமண சமய வேத நூல்களைக் கற்று ‘தருமசேனர்’ என்றபெயரோடு மடாதிபதியானார். தலையிடமான கடலூர் சென்று கொள்கை விளக்கி மக்களை சமண சமயத்தின் பால் ஈர்த்தார். இதைக் கண்ட திலகவதியார் மணம் நொந்தார். அதிகை வீரட்டானம் சென்று தினமும் அலகிட்டு, மெழுக்குமிட்டு, பூமாலை புனைந்து ஏத்தி அப்பெருமானைப் புகழ்ந்து பாடினார். பெருமானே’ ‘நீ என்னை ஆட்கொள்வதானால் அது உண்மையானால் என் தம்பி மீண்டும் சைவம் வரல் வேண்டும். தாங்கள் கருணை புரிய வேண்டும்' என வழிபட்டார்.
ஒருநாள் தருமசேனருக்கு வயிற்றில் சிறு வலி ஏற்பட்டது. சமணத்துறவிகள் மருந்து கொடுத்தும், மந்திரங்கள் ஓதியும் ஒன்றும் குணமாகவில்லை. வலி அதிகரித்தது. அப்போது தமக்கையாரின் நினைவு வந்தது. நம்பிக்கைக்குரிய சமையல் காரர் ஒருவரை தமக்கையிடம் அனுப்பிவத்தார். அவர் சமண மதம் சார்ந்த தம்பியை பார்க்க மறுத்துவிட்டதை கூற, இந்த சூலை நோயை நீக்க முடியாத சமணத்தால் பயன் இல்லை. தன் தமக்கை திருவடியே சரணம் என உறுதி பூண்டார்.
சமண சமயத்தின் சொத்தாக இருந்தன எல்லாம் விட்டு வெள்ளாடை தரித்து வேண்டிய ஒருவரின் கைபிடித்து திருவதிகை அடைந்தார். தமக்கையின் பாதங்களில் வீழ்ந்தார். மருள் நீக்கியே இச்சூலைநோய் இறைவனின் திரு அருளே, நீ இறைபணி செய்வாய் என கூறினார். தமக்கை முன் செல்ல பின் தொடர்ந்து திருஅதிகை வீரட்டானப் பெருமான் கோவிலை நோக்கி சென்றார். கோவிலை வலம் வந்து பதிகம் பாடினார். அருள் பெற்று சூலை நோய் ஒழிந்தது. வானில் ஓர் ஒலி ‘செந்தமிழ் சொல் மலர்களால் ஆன பாமாலை நீ பாடியமையால் இன்று முதல் உன் நாமம் திருநாவுக்கரசு என ஏழு உலகமும் ஏத்துக’ என்று எழுந்தது.
ஆலயங்களுக்கு மக்கள் செல்வது குறைந்தது. கோவில்களில் புல்லும் பூண்டும் முள்செடியும் வளர்ந்து மக்கள் செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டது. திருநாவுக்கரசு அவர்கள் உழவாரம் என்ற கருவிகொண்டு திருஅதிகை வீரட்டானப் பெருமான் கோவில் ஆலயத் திருப்பணிகளைச் செய்தார். அதைக் கண்டு வெகுண்ட சமண துறவிகள் பல்லவ மன்னனிடம் தரும சேனர் பற்றி கூறி கோபமூட்ட மன்னர் தருமசேனரை கைது செய்ய சொன்னார்.
திருஅதிகை சென்ற வீரர்களிடம் நான் பல்லவ நாட்டுக் குடிமகன் அல்லன். நாம் யார்க்கும் குடி அல்லோம். சிவனைத் தவிர யாருக்கும் பணிய மாட்டோம் என்றார். அமைச்சர்களும் மற்றவரும் நீங்கள் மன்னவன் ஆணையை நிறைவேற்றாவிட்டாலும் எம் பொருட்டு வரவேண்டும். உம்மை விட்டுச் சென்றால் எம்மைத் தண்டிப்பான். என்றதை ஏற்று பல்லவன் அரண்மனை சென்றார். தருமசேனர் வருவது கண்ட மன்னன் அவரை சந்தியாமலே ‘அவரை நீற்றரை- சுண்ணாம்பு கொதிக்கவைக்கும் அறையில் இடுங்கள்’ என ஆணையிட்டார். உள்ளே சென்றவர் தில்லை கூத்தபெருமான் திருவடி நினைத்து வழிபாடு செய்தார். சுண்ணாம்பு கொதிக்கும்போது உண்டகும் ஓசை வீணையின் நாதமாகவும், வீசும் துர்நாற்றம் மனம் வீசும் தென்றலாகவும், கொதிக்கும் நீர் தாமரைக்குளம்போன்று குளிர்ந்தும் இருக்க திருநாவுக்கரசர் எட்டு நாள் கழிந்து இன்பமுடன் வருவதைக்கண்டோர் அவருக்கு நஞ்சு கலந்த பால் சோறு தர அது அமுதமானது.
நஞ்சுண்டும் இன்பமாய் இருந்தவரைக்கண்ட சமணர்கள் பட்டத்து யாணையை கொண்டு மிதிக்க ஏற்பாடு செய்தனர். யானை தன்னை நோக்கி வருவது கண்ட திருநாவுக்கரசர் சிவனை நோக்கி அச்சம் தவிர்க்கும் பாடலைப் பாடினார். யானை அவரை வலம் வந்து வணங்கியது. நெஞ்சம் கலங்கிய சமணர்கள் ‘கல்லிலே கட்டி கடலிலே போட’ ஆணையிட்டார். நாவுக்கரசர் பாட்டால் கல்லும் கரைந்து மிதந்து கரையேறவிட்ட குப்பம் அடைந்தார். உண்மையறிந்த பல்லவ மன்னன் சமணம் விட்டு சைவம் சார்ந்தான். திருஞான சம்பந்தர் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.
அதிகை வீர்ட்டாதினத்தில் சிலகாலம் தொண்டு புரிந்து சிவத்திருத்தலங்கள் தோறும் சென்று உழவாரப்பணி செய்து சீர்கெட்ட நிலைகளை மாற்றப் புறப்பட்டு வெண்ணெய்நல்லூர், திருவாமத்தூர், திருக்கோவலூர், வழிபட்டு பெண்ணாகடம் வந்தார். அப்போது அவர் மனத்தினுள் தான் சமணராய் இருந்து அவர்தம் சோற்றைப் புசித்ததால் உடல் மாசு பட்டது என்றும் அதை நீரால், நெருப்பால் போக்கவேண்டும் என நினைத்தார். அதிகாலை எழுந்து திருக்கெடில நதியில் குளித்து மகிழ்ந்தார். எஞ்சிய மாசும் பாவமும் சுட்டெரிக்க வேண்டுமென என்னினார்
தூங்கானை மாடத்தில் வீற்றிருக்கும் சுடர் கொழுந்தீசரைப்பார்த்து, என் உயிர் உடம்பில் இருக்க வேண்டுமானால் எனது தோளில் இடபச் சூலக்குறி- முத்திரை பொறிக்க வேண்டும் என்றார். வேண்டுகோள் ஏற்கப்பட்டு சிவகணம் அதை பொறித்தது. திருநாவுக்கரசர் அகம் குளிர்ந்தார். தில்லைசென்று கருநட்ட கண்டனை, பத்தனாய்ப் பாடமாட்டேன், அன்னம் பாலிக்கும் தில்லை, அரியாணை அந்தணர் தம் சிந்தையானை முதலிய பல பதிகங்கள் பாடி களிப்புற்றார்.
தில்லையிலிருந்து ஞானசம்பந்தப் பெருமானின் பெருமை கேட்டு சீர்காழி நோக்கிச் சென்றார். நாவுக்கரசர் பெருமை அறிந்த சம்பந்தர் அவர் வருவதை அறிந்து அவரை எதிர்கொண்டழைத்து ‘’அப்பரே வாருங்கள்‘’ என்றார். அதுமுதல் அப்பரடிகள் எனப்பட்டார். சில நாட்களுக்குப்பின் சோழநாட்டுத்தலங்களை வழிபட விரும்பி ஞானசம்பந்தரிடம் விடைபெற்று பலதலங்கள் வழியாக திருச்சக்தி முற்றம் வந்தடைந்தார். அங்கு சிவக்கொழுந்தீசரிடம் ‘உன் அழகிய பொன் போலும் திருவடியை என் தலைமேல் சூட்டியருள வேண்டும் என்று தன் ஆசையைச் சொல்ல பெருமான் நல்லூருக்கு வரப்பணித்தார்.
நல்லூரில் பெருமான் பாதம் பணிந்த அப்பரடிகளுக்கு உம்முடைய நினைப்பை முடித்து வைக்கின்றோம் என்றவர் தம் சென்னிமிசை பாதமலர் சூட்டினான். நல்லூரிலிருந்து புறப்பட்டு திருப்பழன நாதரை வழிபட நினைத்து திங்களூர் வந்தார். அந்த ஊரில் அப்பூதியார் திருநாவுக்கரசு என்றபெயரால் தண்ணீர்பந்தல், சோலைகள், குளங்கள், சாலைகள் முதலிய அறங்களைச் செய்து வந்தார். அவர்தம் இல்லத்தில் உணவு அருந்த இசைந்தார். இலை அறுக்கச் சென்ற அவர் மூத்தமகன் பாம்பு கடித்து இறந்தார். ‘ஒன்று கொலாம்’ என்ற பதிகம் பாடி உயிர்பித்து பயணம் தொடர்ந்தார்.
திருப்பழனத்திலிருந்து திருவீழிமிழலை சென்றார். அங்கு அப்பரடியாருடன் சம்பந்தரும் சேர்ந்து தங்கியிருந்த சமயம் மழையின்மையால் ஏற்படும் சோகங்கள் ஏற்பட்ட. மக்கள் துன்பம் மிகுந்தனர். அடியவர் இருவரும் இந்நிலை நினைந்து பெருமானை நினைந்து கண்ணயர்ந்திருந்தனர். ‘உம்பால் நிலவும் சிவநெறி சார்ந்தோர் வாட்டம் அடையாவாண்ணம் நாளும் ஓர் பொற்காசு கிழக்கும் மேற்குமாக அமைந்த பலிபீடத்துத் தருவோம்’ என அருளினார். அவ்வண்ணம் கிடைத்த பொற்காசுகளைக் கொண்டு மடம் அமைத்து அடியவர்களுக்கு தொண்டாற்றினர்.
நாவுக்கரசர் மடத்தில் எல்லோரும் உணவு உண்டபின்தான் சம்பந்தர் மடத்தில் தொடங்கும். காலதாமதத்திற்கு காரணம் காசு மாற்று குறைவாக இருப்பதால் என்பதை அறிந்த சம்பந்தர் மாசில்லாப் பெருமானே நீவழங்கும் காசு மாசுடையதாக இருக்கலாமோ, நான் கைத்தொண்டு செய்ய வில்லை என்றாலும் நீ வழங்கும் காசில் குறையிருக்கக் கூடாதல்லவா, உன்னையாரும் ஏச மட்டார்கள், வேதத்தினைக்கொண்ட இறைவனே கறையுடைய காசினை நீக்கி நல்ல காசினை தருவாயாக எனப் பாடி பெற்றார். நாடு செழித்து வளாம் பெற்றபின் இருவரும் திருமறைக்காடு சென்றனர்.
முன்னொரு காலத்தில் வேதம் மறைக்காடரை வணங்கிக் கதவினை மூடியதாம். அக்கதவு திறக்கப்படாமலேயே இருக்க மக்கள் மாற்று வழியில் சென்று வழிபடு வந்தனர். அங்கு சென்றவுடன் ஞானசம்பந்தர் அப்பரடிகளைப் பார்த்து தாங்கள் தீந்தமிழில் பாடி கதவைத்திறங்கள் என வேண்டினார். அப்பர் ‘பண்ணின் நேர்மொழியாள் உமைபங்கரே’ எனத் தொடங்கி 9 பாடல்கள் பாடியும் கதவு திறக்கவில்லை. வேதனைபட்டு ‘அரக்கனை விரலாற் கொன்ற பெருமானே, இரக்க மென்றிலீர்’ எனப் பத்தாவது பாடல் பாடியவுடன் கதவு திறந்தது.
வழிபாடு முடிந்து இருவரும் வாயிலை அடைந்தனர். அப்பரடிகள் சம்பந்தரைப்பார்த்து இக்கதவு மூடவும் பின்னர் திறக்கவும் பாடுங்கள் என்றார். ‘சதுரம் மறைதான் துதிசெய்து’ என்ற பாடல் பாடியதும் கதவு மூடியது. இருவறும் மகிழ்வுடன் மடம் வந்தனர்.
அப்பரடிகள் தான் 10 வது பாடல் பாடியதும்தான் கதவு திறந்தது, சம்பந்தர் முதல் பாட்டு பாடியவுடன் கதவு மூடியதே, இறைவன் உளக்குறிப்பை அறியாமல் யாதேனும் தவறு செய்தோமா என வருத்துடன் படுத்தார். அப்போது சிவ பெருமான் சைவ வேடத்துடன் தோன்றி வாய்மூரில் இருப்போம் என்னை பின் தொடர்ந்து வருக எனப் பணிக்க நாவுக்கரசர் அவர் பின் சென்றார். அண்மையில் இருப்பதுபோல் இருந்து மறைந்தார்.
சம்பந்தர் எழுந்து அப்பரடிகள் எங்கே என்றார். வாய்மூர் சென்றார் என்பதை அறிந்து வாய்மூர் வந்தார். சம்பந்தரைக் கண்ட அப்பர் வாய்மூர் பெருமானே உன் சதிர் ஆட்டமெல்லாம் என்னிடம்தான் செல்லும். மறைக்கதவம் திறக்கப் பாடிய என்னை விடவும் உறுதிப் பொருள் பாடி அடைப்பித்த அருட்செல்வர் எதிரே நிற்கிறார் இப்போது உம்மை மறைத்துக் கொள்ளும் வல்லமை உண்டோ. உன் அருட் காட்சியைக் காட்டு என்றார். திருவாய்மூர் பெருமான் ஞானப் பிள்ளயார் திருமுன் தோன்றி ஆடல் காட்டியருளினான். தாம் கண்ட காட்சியை அப்பரடிகளுக்கு காட்டி மகிழ்ந்தார் சம்பந்தர், திருவாய்மூரிலிருந்து புறப்பட்டு பலதலங்களை வழிப்பட்டு திருவாரூர் சென்றடைந்தார்.
திருவாருக்கு அருகில் ஏமாப்பூர் என்ற ஊரில் நமிநந்தி அடிகள் எனும் அந்தணர் வாழ்ந்துவந்தார். தினமும் ஆரூர் சென்று புற்றிடங்கொண்டானை வழிபட்டு வருவார். ஓர்நாள் ஆருரில் உள்ள அரநெறி தலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்ய விரும்பினார். மாலைப் பொழுதாகையால் ஊர் சென்று நெய் கொண்டு வரமுடியாது. அருகில் உள்ள வீட்டில் நெய் கேட்டார். அது சமணர் வீடாகையால் கிண்டலாக உன் சிவன் கையில் நெருப்பு வைத்திருக்கின்றானே பின் ஏன் விளக்குக்கு நெய் தேடுகிறீர்கள். தேவையானல் குளத்து நீரில் விளக்கு வைக்கலாமே என்றனர். வேதனையோடு ஆண்டவனிடம் முறையிட விண்ணொலி, அன்பனே, இக்குளத்து நீரைக் கொண்டே விளக்கேற்று’ என எழுந்தது. நமிநந்தியடிகள் குளத்தின் நடுவே சென்று நீரில் மூழ்கி நீர் கொணர்ந்து விளக்கில் ஊற்றி விடியும் வரை எரித்தார். அனுதினமும் நீரால் விளக்கேற்றி வழிபட்டார். இச்செய்தி எங்கும் பரவியது. இதை நாவுக்கரசர் ‘தொண்டர் ஆணி; எனக் குறிபிட்டார். பின் நாவுக்கரசர் ஆருரிலிருந்து புறப்பட்டு பலதலங்களை வழிபடு பழையாறை வந்தார்.
அங்கிருந்து தூரத்தே தெரிந்த கோபுரத்தை கையைமேலே தூக்கி வணங்கினார். அருகிலிருந்தோர் அவரைப் பார்த்து நகைத்து அங்குள்ள சிவன் கோவிலை சமணர்கள் ஆக்கிரமித்து சிவனை மறைத்துள்ளார்கள் என்றனர். நாவுக்கரசர் அங்கேயே அமர்ந்து பெருமானே, சமணர் வஞ்சனையால் மறைக்கப்பட்ட உன் திருமேனி காணாமல் இவ்விடம் அகலமாட்டேன் என உண்ணாமலும் இருந்தார். சிவபெருமான் பழையாறை மன்னன் கனவில் தோன்றி சமணர்களால் நாம் வடதளியில் மறைக்கப் பட்டிருக்கின்றோம், உண்ணாமை பூண்டிருக்கும் நாவுக்கரசர் வெளிப்படையாக வழிபடும் வகையாக ஆவன செய் எனகூறி மறைந்தார்,
மன்னன் தன் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி தடைகளை நீக்கி பெருமானை வெளிக் கொணர்ந்தான். அப்பரடிகள் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவருடன் சென்று வடதளிநாதனை வணங்கி கோவிலுக்கு புதிய கோபுரம் எழுப்பினான். நாவுக்கரசர் இங்கிருந்து கிழம்பி திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, திருவெறும்பூர், திருப்பராய்த்துறை தலங்களை வழிபட்டு திருப்பைஞ்ஞீலியை நோக்கி சென்றார். வழியில் தாகத்தினாலும் களைப்பினாலும் இளைப்புற்றார். அவர் வரும் வழியில் ஓர் அந்தணர் வடிவுடன் பெருமான், பசியால் மிகவும் களைத்துள்ளீர், இப்பொது சோற்றை உண்டு இனிய நீரும் பருகிச் சோலையில் ஓய்வு எடுத்து செல்லுங்கள் என்றார். நாவுக்கரசருடன் திருப்பைஞ்ஞீலிவரை வந்தவர் மறைந்தார். இறைவன் கருணையை நினைத்து பதிகம் பாடினார்.
திருப்பைஞ்ஞீலியிலிருந்து புறப்பட்டு பலதலங்களைக் கடந்து அண்ணாமலை தலம் வணங்கி திருவோத்தூர் சென்று அங்கிருந்து காஞ்சி சென்றார். காஞ்சி ஏகம்பத்துறைப் பெருமானை வணங்கி மகிழ்ந்தார். கச்சிப்பெருமானை வழிபட்டு திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருவொற்றியூர், திருவாலங்காடு, திருக்காரித்துறை, மயிலாப்பூர் முதலிய தலங்களை வழிபட்டு பொன்முகலி ஆற்றில் மூழ்கி திருக்காளத்தி குடுமித்தேவரை வணங்கி பதிகம் பாடினார். அப்போது கயிலைநாதரை வணங்க ஆவல் கொண்டார். கயிலை நோக்கி புறப்பட்டார்.
காடு, மலை கடந்து ஆந்திராவின் திருப்பருப்பதத்தை- ஸ்ரீசைலம் அடைந்தார். அங்கிருந்து ஆறு, மலைகளைக் கடந்து காசி சென்று விசுவநாதரை வணங்கினார். அங்கிருந்து புறப்பட்டு மலைகளைக் கடந்தார் நதிகளைக் கடந்தார். காய் கனி கிழங்கு முதலியன உன்பதையும் தவிர்த்து இரவு பகல் பாராது சென்றார். கையும் காலும் தேய்ந்து சதை பிய்ந்து உதிரம் பெருகியது. அதனுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தார். அயர்ச்சியில் மயங்கினார்.
பெருமான் நாவுக்கரசர் முன் அடியவராகத் தோன்றி, பெரியவரே, சதையெழிய, எழும்பு நொறுங்க இப்பனிக்காட்டில் தாங்கல் செல்லும் காரணம் என்ன என்றார். நவுக்கரசர் எம்பெருமான் கயிலைநாதனை தரிசிக்க செல்கின்றேன் என்றதற்கு அடியவர், அங்கு மானுடர் செல்வது கடினம் உம்முயற்சி வீண், திரும்பிப்போவதே மேல் என்றார். நாவுக்கரசர் என்றைக்கிருந்தாலும் ஒர்நாள் அழியும் இவ்வுடல். இதைகொண்டு அழியாத நாதனைக் காண்பேன் என்றார்.
அப்பரடிகளின் நெஞ்சத்துணிவினை அறிந்த அண்ட நாயகன் விண்ணிடை மறைந்து நின்று ஓ, நாவுக்கரசரே எழுந்திரு என உறைத்து அருளினார். உடலில் வீழ்ந்த சதையெலாம் ஒட்டியது. உறுப்புகளெல்லாம் முன்போல் ஆனது. நாவரசர் வானத்தில் மறைந்து குரல் கொடுத்த பெருமானை நோக்கிப் பணிந்தார். இங்குள்ள பொய்கையில் மூழ்கி நாம் கையிலையில் இருக்கும் காட்சியினை திருஐயாற்றில் கண்டு மகிழ்வாயாக என அருளினான்.
நாவரசர் திருத்தாண்டகம் பாடி திருஐந்தெழுத்தை ஓதி அவ்வாவியில் மூழ்கி திருஐயாற்றில் உள்ள ஒரு தடாகத்தில் தோன்றிக் கரையேறினார். பெருமான் கருணையை நினைந்து உருகிக் கண்ணில் நீர் சொரிய இறைவனை வணங்கச் செல்ல அங்கு இருப்பதெல்லாம் கயிலையில் இருப்பது போன்று உணர்ந்தார். நந்தியைக் கண்டார் சிவபெருமான் உமாதேவியுடன் வீற்றிருந்த காட்சியைக் கண்டார். ஆனந்தத்தில் திளைத்தார். சிறிது நேரத்தில் அக்கயிலை காட்சி மறைந்து திருவையாறு அமர்ந்த பழைய நிலையினை உணர்ந்தார். திருப்பதிகம் பாடியருளினார். ‘முன்னே கண்டேன் அவர் திருப்பாதம், அதன்பின் கண்டறியாதன் கண்டேன்’ என்றார்.
அப்பரடிகள் சைவம் தழைக்கத் தொண்டர்களை உருவாக்க தாமே திருப்பூந்துருத்தி எனும் ஊரில் மடம் அமைத்தார். அங்கு தங்கி பல பதிகங்கள் பாடினார். ஞானசம்பந்தர் பாண்டிநாடு சென்று சோழநாடு வந்தார். அப்பரடிகளைத்தேடி திருப்பூந்துருத்தி சென்றார். சம்பந்தர் வருவதை அறிந்த அப்பரடிகள் எதிர்சென்று கூட்டத்தில் கலந்து சம்பந்தர் பல்லக்கை தாங்கினார். அப்பரடிகள் எங்கே என்று கேட்டபொழுது அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பேறு பெற்று இங்குள்ளேன் என்றதைக்கேட்ட சம்பந்தர் பதறி பல்லக்கில் இருந்து கீழே குதித்து அப்பரடிகளை வணங்கினார்.
சிலநாட்கள் கழித்து சம்பந்தரிடம் விடைபெற்று பாண்டிநாடு சென்றார். நெடுமாறான் மங்கையர்கரசி, குலச்சிறையார் ஆகியோர் விருந்தினராகத் தங்கி தல யாத்திரை மேற்கொண்டார். திருப்புகலூர் வந்து உழவாரப்பணி செய்து தங்கினார். அங்கு நின்ற தாண்டவம், வாழ்த்துத் திருத்தாண்டகம், திருநேரிசை, தனித்திருநேரிசை, ஆரூயிர் திருவிருத்தம், தசபுராணத்தடைவு, பாவநாசத் திருப்பதிகம், அறைகூவும் திருப்பதிகம் முதலிய பாமாலைகளைப் பாடினார். அங்கு உழவாரப்பணி செய்தபோது பொன்னும் நவமணியும் வந்தது. ஓடும் செம்பொன்னும் ஒன்றாக கருதிய அப்பரடிகள் அவைகளை தூர எறிந்தார்.
புகலூர் இறைவன் தன்னை திருவடியில் இருத்திக் கொள்வான் என முன்னுணர்வு காரணமாக, ‘புண்ணியத்தின் வடிவமாக விளங்கும் பெருமானே, உன் திருவடிக்கு வர நான் விரும்பினேன்'என பதிகம் பாடினார், கருவறையில் சோதி எழ அதிற் கலந்து பேறு பெற்றார். 81 ஆண்டுகள் வாழ்ந்த அப்பரடிகள் இறைவன் திருவடியை பணிவதுதான் அவரை அடிய முக்கிய வழியேயன்றி சாதியும் சாத்திரமுமல்ல என்றார். 

                                            

அந்த நால்வர்.....
1.திருஞானசம்பந்தர்/3.சுந்தரர்/4.மாணிக்கவாசகர்

                                            ******

சுந்தரர்

Written by

சுந்தரமூர்த்திநாயனார்
திருக்கையிலையில் சிவனுக்கு சூட்ட மாலையும் திருநீறும் எடுத்து தரும் தூய ஆன்மாவாக இருந்தவர் ஆலால சுந்தரர். ஈசன் மண்ணுலக மாந்தர் எல்லாம் அடியவர்கள், தொண்டர்கள் பெருமையை மக்கள் உணர, சுந்தரரை மண்ணுலகுக்கு அனுப்ப முடிவு செய்திருந்தார். எப்போதும் போல் நந்தவனத்திற்கு மலர் கொய்யச் சென்ற சுந்தரர், உமையின் சேடியர்களான கமலினி, அனிந்தை இருவரும் பூக்கொய்ய வந்து திருப்பும்போது சுந்தரர் காட்சியில் வந்தனர். மனத்தைப் போக்கிய சிவனே மாதர்மேல் மனம் வைத்தனை என்று கூறி அந்த பெண்களுடன் காதல் இன்பம் களித்துவர பணிந்தார். இறைவனைப் பிரிய மனமின்றி வேறு வழியில்லாததாலும் இறைவா, உன் ஆணைப்படி மண்ணுலகில் பிறக்கின்றேன், உலகம் மாய அறிவு கொண்டது. உலக மயக்கத்தில் நான் இருக்கும்போது எனைத் தடுத்து ஆட் கொள்ளவேண்டும் என வேண்டி சிவனின் அருள் பெற்றார்.
மழை இடைவிடாமல் பெய்துகொண்டிருக்க ஒரு பெரியவர் வீட்டில் படுத்திருந்தார். அப்போது ஒரு குரல் மழை அதிகமாக இருக்கின்றது உள்ளே வரலாமா என்றது. அந்தப் பெரியவர். ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம், உள்ளே வாருங்கள் என்றார், அந்தச் சமயம் இன்னொரு குரல் உள்ளே வரலாமா என்றது. அவ்விருவரும் ஒருவர் படுக்கலாம், இருவர் உட்காரலாம், மூவர் நிற்கலாம் வாருங்கள் என்றனர். என்னே அன்பு. மனித நேயம். அப்போது நான்காவதாக ஒருவர் தோன்றி மூவரையும் நெருக்கினாராம். மூவரில் ஒருவர் விளக்கேற்றிப் பார்க்க நாராயணன் சங்கு சக்ரதாரியாக அங்கு இருக்க கண்டனர். இவர்கள் வழிபாடு நடத்திய மண்டலம், நாடு நடுநாடு.
அந்த நடுநாட்டில் திருநாவலூரில் வாழ்ந்த ஆதிசைவக் குடும்பத்தின் சடையனார் – இசைஞானியார் ஆகிய இருவரின் மகப்பேறு வேண்டிய தவத்தினால் சிவன் அருளால் திரு அவதாரம் செய்தார் ஆலால சுந்தரர்.
சேடியர்களில் கமலினி திருவாரூரில் பதியிலார் குலத்தில் பிறந்தார். அனிந்தை ஞாயிறு என்ற ஊரில் வேளாள குலத்தில் பிறந்தார்.
சடையானாரும் இசைஞானியாரும் தம் குழந்தைக்கு நம்பியாரூரர் எனப் பெயர் வைத்து அன்பைக் கொட்டி வளர்க்க நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை பேரழகு உடையவனாக வளர்ந்தது. ஒருநாள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவ்வழி சென்ற மன்னன் குழந்தையின் அழகில் மயங்கி தனக்கு அக்குழந்தையை மகனாகக் கொடுக்க வேண்டினார். அந்த வேண்டுகோள் சடையனாரின் மனத்தைக் கரைத்துவிட நம்பியாரூரர் சுவீகாரம் மூலம் மன்னர்மகன் ஆனார், பெறாமல் அன்பினால் மகமை கொண்டார் நரசிங்கமுனையர் என்ற அந்த மன்னன்.
அரண்மனையில் வளர்ந்தாலும் அந்தனர்குரிய முறைகளையும் பயின்றார் நம்பியாரூரர். அந்தக்கால முறைப்படி 16 வயதினில் அவருக்கு அந்தனர் வழியிலே பெண் பார்த்து குணநலன் மிக்க சடங்கவி என்ற அந்தணன் இல்ல மகளை பேசி மணம் முடிக்க முடிவாயிற்று. ஆயிரம் பேரைப் போய் விசாரித்துப் பேசி திருமணம் செய் என்ற பழமொழிக்கு ஏற்ப விசாரனை முடிந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.
ஆரூரருக்கு மங்கள நீராட்டு நடைபெற்று குதிரை ஏறி வலம் வந்து மணமேடையில் அமர்ந்ததும் வேத மந்திரங்கள் முழங்க அக்னி வளர்த்தனர். மணப் பெண் மேடைக்கு வரும் வேளையதில் ஒரு பெரியவர் நெற்றியிலே திருநீற்றுடன் கழுத்திலே உருத்திராசமாலையுடன் கைத்தடியூன்றி மேடையருகினில் வந்தார். அக்கூடத்தில் இருந்தவர்கள் அனைவரின் பார்வையையும் அவர் கவர்ந்தார். அவர்கள் இதுவரை இளமைதான் அழகு என எண்ணியவர்கள். இப்போது ஒரு முதியவர் தோற்றம் அதைவிட அழகாக இருக்க கண்டு வியந்தனர். முதுமையே பேரழகு என்றனர்.
அப்போது அந்தப் பெரியவர் மேடை அருகே நின்று நான் சொல்லுவதைக் கேளுங்கள் என்றார். மேளதாள ஓசை முதல் அனைத்தும் நின்றது. எல்லோரும் அவரையே பார்த்தனர். அவர், மணமகனைப் பார்த்து ஆரூரா, உனக்கும் எனக்கும் ஒரு வழக்கு ஒப்பந்த அடிப்படையில் உள்ளது. அதனை முடித்துவிட்டு திருமண வேள்வியைச் செய் என்றார். மேலும் ‘’திருநாவல்நகர் ஆரூரர் என் அடிமை’ என்பதுதான் என் வழக்கு என்றார். உலகத்தில் இல்லாத செய்தியாக, குற்றமற்ற அந்தணர்கள் வேறு ஒரு அந்தணருக்கு அடிமை என்று சொல்லும் முதல் ஆள் நீ, இதனை நம்ப மாட்டேன் என ஆரூரர் தெரிவிக்க பெரியவர் அதற்கான அத்தாட்சி இதோ அடிமைச்சீட்டு என காண்பிக்க, அதைக் கைப்பற்ற ஆரூரர் பெரியவரை மணவறையைச் சுற்றித் துரத்தி அதைப் பற்றி கிழித்துவிடுகிறார்.
ஒருவரிடம் உள்ள ஓலையை வாங்கி அதை மற்றவர்கள் படிக்குமுன் கிழிப்பது தர்மமா. என்றும் ஓலையைக் கிழித்ததனால் அடிமை என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்றார் பெரியவர். ஊர் பெரியோர்கள் பெரியவரின் சொந்த ஊரான வெண்ணெய் நல்லூருக்குச் சென்று அங்கு அவையில் பேசலாம் என முடிவெடுத்தனர்.
வெண்ணெய் நல்லூர் நீதிமன்றத்தில் ஆரூரரின் உறவினரும் இரண்டு ஊர் பெரியவர்களும் வந்திருந்தனர். நாவலூர் ஆரூரன் என் அடிமை என்று நான் காட்டிய ஓலையை கிழித்து விட்டான். இதுதான் என் வழக்கு என்றார் பெரியவர். அந்த மன்ற நடுவர் அந்தணரே, அந்தணர் அடிமை என்பது இம்மாநிலத்திலேயே இல்லாத ஒன்று நீர் கூறுவது புதுமையாக இருக்கின்றது என்றார். ஆரூரன் என் மனத்திற்கு எட்டாத மாயையாக இருக்கின்றது இவர் கூற்று என்றார். நடுவர், பெரியவரே நீங்கள் சொல்வதற்கு எந்த சாட்சியும் இல்லை, ஆதாரமும் இல்லை, எப்படி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவது என்றனர்.
பெரியவர் இவன் கிழித்தது படி ஓலை. மூலம் மடியில் வைத்துள்ளேன். எனக்கு பதுகாப்பு தருவதாக இருந்தால் அதைக் காண்பிக்கின்றேன் என்றார். அவையோர் உறுதியளிக்க அவர் காட்டிய ஒலையைப் படித்து அப்போது அதில் சாட்சியிட்டிருந்தோர் அது தம் கையெழுத்து என ஒப்புதல் அளிக்க. ஆரூரர் அது தன் பாட்டனார் கையெழுத்து என ஒப்பு நோக்கிச் சொல்ல நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.
நம்பியாரூராரே நீர் தோற்றீர். அவர் இடும் பணியை ஏற்று அவர் சொல்வழி செயல்படுவது உன் கடன் என்று தீர்ப்பு வழங்கினர். அப்போது கூட்டத்திலிருந்த சிலர் பெரியவரே நீங்கள் இந்த ஊர் என்கிறீர்கள் உங்களை நாங்கள் பார்த்தது கிடையாது. யாது உங்கள் வீடு என்றனர். அப்பெரியவர் என்னை யாரும் அறியவில்லையெனில் என்பின்னே வாருங்கள் என் வீட்டை காட்டுகிறேன் என முன்னே செல்ல அனைவரும் பின்னே சென்றனர்.
திருவெண்ணெய் நல்லூரில் உள்ளே திருக்கோவிலான திருவருட்துறை கோவிலை அடைந்தார் பெரியவர். உள்ளே சென்று மறைந்தார். ஆரூரர் உட்பட பின் தொடர்ந்து வந்தவர்கள் திகைத்தனர். வான்வழி ஓர் ஓசை எழுந்தது.
மற்று நீ வன்மை பேசி வந்தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கும் அன்பிற்பெருகிய சிறப்பின் மிகக்
அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
செந்தமிழ் பாடு என்றார் தூமறை பாடும் வாயார்.
வேதங்களை எந்த வாயால் பாடினாரோ அந்தத் திருவாயால் ஆரூராரைப் பார்த்து ‘எமக்கு விருப்பமான வழிபாடு அர்ச்சனைப் பாட்டேயாகும்’. எனவே நம் செந்தமிழால் பாடு. என்னிடம் வன்மை பேசி வந்த நீ வந்தொண்டன் என்னும் நாமம் பெற்றாய் என்றது அவ்வோசை.
என்ன சொல்லிப் பாடுவேன் என்ற ஆரூராருக்கு பித்தன் என்று சொல்லிபாட அருள் பிறந்தது. முதல் பாடல்
பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா
எத்தா மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய்ப் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.
என்னைக் கோவில் தோறும் சென்று பாடுக என்ற அருள் வாக்கிற்கேற்ப பல தலங்களையும் வழிபட்டு அதிகை வீரட்டானம் சேர்ந்தார்.
அது அப்பரடிகள் சூலைநோய் தீர்த்த தலம். அப்பரடிகள் உழவாரப்பணி செய்து பல காலம் இருந்த தலம். இதை தாம் மிதிக்கலாகாது என்று ஊர் எல்லையில் உள்ள சித்தவட மடத்தில் மற்ற அடியார்களுடன் தங்கினார். நள்ளிரவு 2 மணியளவில் நம்பியாரூரார் தலைமேல் ஒரு பெரியவர் கால் நீட்டி உதைத்தார். அய்யா பெரியவரே என் தலைமீது தாங்கள் கால் நீட்டுவது ஏன் என்றார். வயது முதிர்ந்துவிட்டது எந்த திசையில் கால்வைப்பது எனத் தெரியவில்லை எனது மூப்பினால் என்றார். ஆரூரர் வேறு இடத்தில் படுத்தார். சிறிது நேரத்தில் அதே பெரியவர் மீண்டும் காலால் எட்டி உதைத்தார். ஆரூரார் பெரியவரே என் முடிமீது கால் வைக்கின்றீரே என்றார். பெரியவர் பழைய பதிலான திசையறியா வகை செய்தது மூப்பு என்றார். இது அதிகாலை நாலரைமணி வரை நடைபெற்றது. ஆரூரர் சலிப்புற்று என்னை பலகாலும் மிதித்தனை நீர் யார் எனக் கேட்க என்னை அறிந்திலையோ என்று மறைந்தார் பெரியவர். அப்போதுதான் அது சிவன் என உணர்ந்தார். அடியார் திருக்கூட்டச் சாதியைச் சார்ந்த நான் அதன் தலைவனாகிய இறைவனை உணாரவில்லையே என மனம் நொந்து ‘தம்மானையறியாத சாதியர் உளரோ’ எனப்பாடினார்.
தில்லையில் கண், தாது, மூக்கு, செவி, வாய் ஆகிய ஐந்து பொறிகளும் கண்ணிலே நிலைத்து நிற்க வழிபட்டார் ஆரூரர். அந்தக் கராணங்களாகிய மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகிய நான்கும் சிந்தையிலே லயிக்க வழிபட்டார். தில்லையிலிருந்து புறப்பட்டு சீர்காழி சென்றார்.
ஞான சம்பந்தம்பிள்ளை திரு அவதாரம் செய்த ஊர்மண்ணை காலால் மிதிக்கக்கூடாது என எண்ணி ஊர் எல்லையில் தங்கியிருந்து சிவனை வழிபட்ட ஆரூரருக்கு வழியிலே கயிலைக் காட்சியைத் தந்தார் இறைவன். பின் திருவாரூரை நோக்கி சென்றார். அன்றிரவு அடியார்கள் கனவில் பெருமான் தோன்றி ஆரூரன் நாம் அழைக்க இங்கு வருகிறான். அவனுக்கு வரவேற்பு செய்யுங்கள் எனப் பணித்தார். ஊர் எல்லையில் அடியார்கள் பெரும் கூட்டமாக சென்று வரவேற்றனர். அங்கு சில நாட்கள் தங்கி காலையும் மாலையும் வழிபாடு செய்தார்.
ஆரூர் பெருமான் தோழமையாக தம்மை ஆரூரருக்குத் தந்தோம் என்று சொன்ன செய்தி அறிந்த அடியார்கள் நம்பியாரூரரை ‘தம்பிரான் தோழர்’ எனப் புகழ்ந்தனர். அம்பிகையின் சேடியான கமலினி திருவாரூரில் பதியிலார் குலத்தில் தோன்றியவருக்கு இப்போது பரவையார் எனப் பெயர். அவர் இறைவனுக்கு மலர்மாலையை கொண்டுவரும்போது ஆரூரரைப் பார்த்தார். ஆரூரர் அன்று இரவு பரவையரை நினைத்திருந்தார். அதேபோல் பரவையரும் ஆரூரரை நினைத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு அடியவர்கள் கனவில் தோன்றிய இறைவன் பரவையை நாம் ஆரூரனுக்குத் தந்தோம். அவர்களுடைய திருமணத்தை நடத்துங்கள் என்றார். திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இன்பத்தில் திளைத்தனர்.
எப்போதும்போல் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கச் சொல்லும் போது மண்டபத்தில் அடியார்கள் கூடி பாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தொண்டு செய்வது எப்போது என்று சிந்தித்துக் கொண்டு சுற்றி வரும் ஆரூரைக் கண்ட விறன்மிண்டர் அடியார் கூட்டத்தை மதியாமல் செல்லும் அவர் யார் என்றார். ஓலைகாட்டி அடிமையானவர் என்றனர். அடியவர் கூட்டத்தை மதியாமல் செல்லும் அவரை திருக்கூட்டத்திலிருந்து விலக்கி வைக்கின்றேன் என்றார். அருகிலிருந்தவர்கள் அவர் புற்றிடம் கொண்டவருக்கு மிகவும் வேண்டியவர் என்றனர். அப்படியானால் அவரையும் விலக்கி வைக்கின்றேன் என்றார்.
அதைக் கேட்ட சிவன் ஆரூரர் உள் நுழைவதற்கு முன்பே வெளிவந்து அடியவர்கள் புறக்கணித்தபின் என்னால் நிலை கொள்ள முடியவில்லை, அடியவர்களின் பெருமையை நான் சொல்கிறேன் நீ கேட்பாயாக ஆரூரா என்றார். அடியவர்களுடைய பெருமைக்கு நிகர் அவர்களேதான். அவர்கள் பெருமைக்கு முன் என் பெருமை சற்று குறைவுதான். அன்பினாலே என்னை அவர்கள் பெற்றவர்கள். உள்ளத்து ஒருமையால் உலகையே வெல்லக் கூடியவர்கள். குறையேது மில்லாதவர்கள். உலகில் துன்பம் வராதிருக்க வேள்வி செய்பவர்கள். திருநீற்றின் செல்வமே பற்று என்றும் சிவனின் அன்பே பேறு என்றும் நினைப்பவர்கள். வீடு பேற்றை கூட வேண்டாம் என்று பலன் கருதாது பக்தி செலுத்துகின்ற தொண்டர்கள். அவர்களை நீ சென்றடைவாய். குற்றமற்ற அந்த அடியவர்களை நீ சென்று பாடு எனப் பணித்து ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என முதல் அடியை எடுத்துக் கொடுத்தார். தில்லையில் கூத்தப் பெருமானை வழிபடுகின்ற அத்தனை பேரையும் சேர்த்தே ‘தில்லைவாழ் அந்தணர்' என்றார்.
ஆரூரர் குறிக்கோள் ‘யாவர் சிவனடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன்’ என்பதே.
அந்தணர் ஒரு சாதியில் தோன்றியவர் என்று யவரும் இல்லை. அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர்- அறத்தன்மை பூண்டு எவ்வுயிரும் ஈசன் கோயில் என்று எண்ணி வாழ்வோரே அந்தணர். சத்திய வாழ்வைக் கடைப்பிடிப்பதே அந்தணத் தண்மை.
நம்பி ஆரூரர் அரனையும் அரனடியாரையும் வழிபட்டு பரவையாரோடு இல்லறம் இனிது நடத்திவந்தார். ஆரூர் அருகில் உள்ள குண்டையூரின் குண்டையூர்கிழார் ஆரூரர் பால் கொண்ட அன்பினால் அவருக்கு வேண்டிய நெல்லை அளித்துவந்தார். வறட்சியால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ஆரூரருக்கு எப்படி நெல் அனுப்புவது என வேதனைப்பட்டார். உணவு உண்ணாது இருந்தார். அவர்கனவில் இறைவன் தோன்றி ஆரூரான் பொருட்டு நெல் கொடுத்தோம் என அருள் பாலித்தார். காலயில் எழுந்து பார்த்தபோது இருந்த நெல்மலையை எப்படி ஆரூருக்கு எடுத்துச் செல்வது என் குழம்பி ஆரூர் சென்று நடந்ததை ஆரூரரிடம் சென்னார். ஆரூரர் நெல் மலையைப் பார்த்து இது மனித முயற்சியால் கொண்டு செல்ல முடியாது என்று அருகில் உள்ள கோளிலி இறைவனிடம் ஆள் வேண்டி பாட இறைவனும் அன்று இரவு பரவையார் மாளிகை இருந்த வீதிக்கு தம் பூதகணங்களின் மூலம் எல்லா நெல்லையும் கொண்டு சேர்த்தார்.
நெல் மலையைக்கண்டு அதிசயத்து பரவையார் அங்கு வசிக்கும் மக்களைப் பார்த்து உங்கள் மனை எல்லைக்கு உட்பட்ட நெல் குன்றெல்லாம் அவரவர் வீட்டிற்கு எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவிப்பை செய்தார். சில நாட்களிந்து ஆரூரர் திருநாட்டியத்தான் குடி என்ற ஊருக்குச் சென்றவரை கோட்புலி என்ற அடியவர் எதிர்கொண்டு அழைத்து கோவிலில் வழிபாடு நடத்தினார். கோட்புலியார் ஆரூரரை வணங்கிய சிங்கடி, வனப்பகை என்ற தம் இரு பெண்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டினார். நம்பிஆரூரர் கோட்புலியாரே அவர் இருவரையும் என் மக்களாக ஏற்றுக் கொண்டோம் என்றார். அங்கிருந்து திருவையாற்றுப் பெருமானை வணங்கி திருஆலம்பொழில் சென்று இரவு தங்கினார். இரண்டு தலங்களுக்கிடையில் உள்ள வயிரத்திருமேனிகொண்ட திருமழப்பாடி இறைவன் கனவில் என்னைப் பாட மறந்தனையே என்றார். திடுக்கிட்டு விழித்தவர் மெய்யுருகிப் பதிகம் பாடினார்.
வலிவலம் சென்று பதிகம் பாடுமுன் ‘நான் பாடுகிற பாடல் எதுவானாலும் நானாக சொன்னதில்லை, எனக்குமுன் வாழ்ந்த நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் சொல்லியதே’ எனச் சொல்லி பதிகம் பாடினார். அங்கிருந்து திருவாரூர் வந்து உத்திரத் திருவிழாவிற்கு பொருள் வேண்டி திருப்புகலூர் சென்று வழிபாடு செய்து கண் அயர்வில் அங்கிருந்த செங்கல்லை தலைக்கு அனையாக வைத்து படுத்தார், எழும்போது அச்செங்கல் தங்கமாக மாறியிருந்தது,
சிலநாட்கள் சென்றபின் திருச்சி நகர் வந்தார். திரு ஆனைக்கா சிவனை வழிபட்டார். சோழமன்னன் காவிரியில் குளிக்க மூழ்கியபோது அவனுடைய இரத்தின மலை நீரிலே காணாமற்போனது. கவலைப்படாமல் அது சிவனுக்குரியது என்றார். அப்போது சிவனை காவிரியில் இருந்து கொணர்ந்த நீரால் குளிப்பாட்ட மன்னன் சிவனுக்குரியது என்றமாலை சிவன் கழுத்தில் இருந்தது. அது பற்றி பதிகம் பாடினார். அங்கிருந்து விருத்தாச்சலம் சென்று கோவிலில் பெருமானை பாடி வழிபட்டார். உத்திரப் பெருவிழாவில் அடியார்க்கு அமுது படைக்க பொருள் தேவை என வேண்ட இறைவன் பதினாறாயிரம் பொற்காசுகளைத் தர அவற்றை என்னாலே எடுத்துக் கொண்டு போகமுடியாது நீங்களே அங்கே கொடுங்கள் என்றார் ஆரூரர். பெருமான் திருமுத்தற்றிலே போட்டு திருவாரூர் குளத்திலே எடுத்துக் கொள் என்றார்.
பெருமான் கொடுத்ததில் மச்சம் பார்க்க கொஞ்சம் வைத்துக் கொண்டு மீதியை ஆற்றில் போட்டார். திருவாரூர் சென்றார். பரவையார் கேட்டார். பணம் காலையில் வரும் என்றார். காலை வந்தது. குளித்தார். வழிபாடு முடித்து குளக்கரைக்கு பரவையருடன் வந்தார். குளத்தில் மூழ்கி தேடினார். தேடிக்கொண்டே இருந்தார். மாலையாயிற்று, பரைவையார் இன்னும் என்ன குளத்தில் தேடுகின்றீர்கள் என்றதற்கு திருமுத்தாற்றில் போட்டேன் திருவாரூர் குளத்தில் எடுப்பேன் என்றார். பரவையார் ஆற்றில் போட்டு குளத்தில் எடுப்பது என்பதையா என்றார். அதை வைத்தே பதிகம் பாடினார், தான் மச்சம் பார்க்க எடுத்துவைத்தது தவறு என்றாலும் நீ இவ்வாறு செய்யக்கூடாது என்று பாட அருள் பெற்று காசு எடுத்து திருவிழாவில் அடியவர்க்கு அமுது படைத்து இன்புற்றார்.
பெருவிழா முடிந்ததும் தம் தல பயணத்தை அன்பர்களுடன் துவக்கி திருக்கருகாவூர் சென்றார். காலை முதல் உண்ணாமையால் மிகவும் களைப்படைந்தனர். வழியில் ஒரு பெரியவர் என் பின்னால் வாருங்கள் என அழைத்து அவர்கொடுத்த கட்டமுதையும் நீரையும் சுவைத்து தங்கள் பசியையும் தாகத்தையும் போக்கினர். அனைவரும் கண்ணயர்ந்தனர். திடிரென்று வெயில் பட்டதும் விழித்தால் சோலையும் தெரியவில்லை பந்தலையும் காணோம் பெரியவரையும் காணோம். இத்தனை மாற்றம் நடந்தும் தெரியாமல் போனேனே என ஒரு பதிகம் பாடினார். பலதலங்களை வழிபட்டு திருக்கச்சூர் மலைக்கோவில் உள்ள மருந்தீசரை வணங்கி வெளியில் அமர்ந்திருந்தார். உணவு சமைப்பவர் வராததால் பசியுடன் இருந்தவர் முன்னால் பெரியவர் ஒருவர் இந்த ஊரில் பல இல்லங்களில் இரந்து வந்திருக்கின்றேன் என அமுது ஊட்டினார். அங்கிருந்து காஞ்சி சென்று வழிபட்டு திருவொற்றியூர் சென்றார்.
மாந்தாதா என்ற சிவபக்தர் இமயம் முதல் குமரிவரை பல அறநிறுவனங்களை நிறுவியதன் விளைவாக அவரின் வாழ்நாள்கூட அவரின் வாரிசுகள் இறந்தும் இவர் பன்னெடு நாள் வாழ்ந்தார். அது சலிப்பை ஏற்படுத்த அறிஞர்களை வரவழைத்து ஆலோசனை புரிய அவர்கள் மாந்தாதா செய்த அறங்களையெல்லாம் ரத்து செய்து பத்திரம் எழுதிக்கொடுத்தால் இறந்து விடுவீர்கள் என்றனர். பத்திரம் எழுதியாயிற்று. அன்று இரவு இறந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் படுக்கச் சென்றார். எதுவும் நடக்கவில்லை. பத்திரத்தை பெரியோர்கள் எடுத்து பார்த்தபோது அவர் செய்த அறங்கள் எல்லாம் திருவொற்றியூர் நீங்கலாக என எழுதியிருந்தது கண்டனர். எழுதும்போது திருவொற்றியூர் நீங்கலாக என எழுதவில்லை. அப்படியானால் திருவொற்றியூர் பெருமான் அதைச் சேர்த்துள்ளார். மாந்தாதா இறப்பை அப்போதைக்கு இறைவன் விரும்பவில்லை எனத் தெரிந்தது. இறைவன் எழுத்து அறியும் பெருமான் ஆனார்.
அருகில் உள்ள ஞாயிறு என்ற தலத்தில் ஞாயிறுகிழார் என்பவரின் மகள் சங்கிலியார் பருவமடைந்தார். கயிலையில் உமாதேவியரின் சேடிகளில் ஒருவரான அனிந்தைதான் இவர். பெற்றோர் அவருக்கு மணமுடிக்க விரும்பினர். அவரை மணம்பேச வந்தவர் இறந்ததால் அந்தச்செய்தி ஊரெங்கும் பரவியது. இறையருள் பெற்ற ஓர் அடியாரைத்தான் மணப்பேன் என்ற சங்கிலியார் விருப்பத்திற்கேற்ப கோவில் அருகே ஒர்வீடு அமைத்துக் கொடுத்தனர். அங்கிருந்து காலையும் மாலையும் வழிபட்டு இறைவனுக்கு மலர் தொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அங்கு வந்த நம்பி ஆரூரர் சங்கிலியரைப்பார்க்க அவரும் ஆரூரரைப் பார்த்தார்.
பண்டைவினை தொடர அவரை மணம் செய்ய விரும்பிய ஆரூரர் இறைவனிடம் சென்று வேண்டினர். இறவன் உறுதியளித்தார். சங்கிலியர் கனவிலே வேதியராகச் என்று ஆரூரான் உன்னை மணக்க விரும்புகிறான். நீ உன் சம்மதத்தை கொடு என்றார். சங்கிலியார் அவர் திருவாரூரில் வசிப்பவர் என்றார். இறைவன் ஆரூரா உன்னை விட்டு பிரியேன் என்று ஓர் சத்தியம் செய்வாயானால் நீ அவளை மணந்து கொள்ளலாம் என்றார். ஆரூரர் தலயாத்திரை செய்யும்போது இந்த ஆணை இடையூறாக இருக்கும் என்பதால் பெருமானிடம் சங்கிலியாருக்கு நான் உறுதி செய்யும்போது கருவரையில் உன்திருமேனி இருக்காமல் கோவிலின் புறத்தே உள்ள மகிழமரத்தடியில் இருங்கள் என்றார். அங்கிருந்து புறப்பட்டு சங்கிலியார் கனவில் தோன்றி சங்கிலியாரே நீர் கேட்டவண்ணம் என்நண்பன் ஆரூரர் தரும் ஆணையை நீ என்முன் திருக்கோவிலில் பெறவேண்டாம். மகிழமரத்தடியில் பெற்றுக்கொள் எனக்கூறி மறைந்தார்.
காலையில் எழுந்து சங்கிலி நாச்சியார் இரவு நடந்ததை தன் தோழியரிடம் கூறி கோவில் பணிக்குத் தயாரானார். சுந்தரர் கோவிலுக்கு வந்தார். சிவனின் அருளால் தான் உறுதி செய்து தறுவதைக்கூற தோழியர்கள் ஆணையை மகிழமரத்தடியில் செய்யுங்கள் என்றனர். அப்போதுதான் ஆரூரரருக்கு இறைவன் செய்த சூழ்ச்சி புரிந்தது. வேறுவழியில்லாமல் மகிழமரத்தடியில் உறுதி செய்தார். அடியவர்கனவில் தோன்றி சங்கிலியருக்கும் சுந்தரருக்கும் மணமுடிக்க கட்டளையிட்டிருந்ததால் மணம் சிறப்பாக நடைபெற்றது. இல்லறம் இனிது நடந்தது.
வேனிற்காலம் தொடங்கியது. ஆரூரரருக்கு திருவாரூரின் உத்திரப்பெருவிழா நினைவு வந்து அந்த நினைவாக பதிகம் பாடினார். அங்கிருந்து திருவாருரை நோக்கிப் புறப்பட்டார். திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் சுந்தரரின் கண்பார்வைபோனது. கண்ணுக்கு மருந்து கொடு என திருவொற்றியூர் பெருமானிடம் பதிகம் பாடினார். அடியவர்களின் துணையோடு திருவாரூர் செல்லும் வழியில் திருமுல்லைவாயிலில் பதிகம் பாடி திருவெண்பாக்கம் சென்று பதிகம் பாடினார். அங்கு கருவரயிலிருந்து அவருக்கு ஓர் கைத்தடி வந்தது. அங்கிருந்து திருஆலங்காடு, திருவூரல் தலங்களை வழிபட்டு காஞ்சி ஏகாம்பரை வழிபட்டார். ஏகம்பத்து ஈசன் அவருக்கு இடதுகண் பார்வை கொடுத்தார். திருஆமத்தூர் தலத்தில் வழிபாடு செய்தார். அங்கிருந்து திருஅறத்துறை திருஆவடுதுறை திருத்துருத்தி தலங்களுக்குச் சென்று பதிகம்பாடி வழிபட்டார். அப்போது கோடைக்காலம். வெப்பமிகுதியால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. திருத்துருத்தி இறைவனிடம் பிணிநீக்க பதிகம் பாட குணமாகியது.
திருவாரூரை நோக்கி பயணப்பட்டார். நாரைகளை திருவாரூர் பெருமானுக்கு தூது அனுபினார். பூங்கோவிலில் சென்று பதிகம் பாடினார். மற்றொறு கண்ணைத்தர வேண்டினார். ஆரூர் பெருமான் வலக்கண்ணைத் தந்தார். பரவையார் ஆரூரரை பற்றிய செய்திகளெல்லாம் அறிந்து என்னிடத்தில் சங்கிலியா, இனி இவர் உறவே வேண்டாம் என முடிவு எடுத்தார். அடியார்கள் மூலம் இதை அறிந்த ஆரூரர் புற்றிடங்கொண்ட பெருமானிடம் முறையிடுகின்றார். இறைவன் பாதி இரவில் அந்தணர் வேடம் கொண்டு பரவையார் இல்லக்கதவைத் தட்ட, நடு இரவில் வந்த காரணம் கேட்டு அப்போதும் பரவையர் பிடிவாதமாக இருக்க, அந்தணர் ஆரூராரிடம் சென்று பரவையர் மறுப்பை தெரிவிக்க ஆருரர் இறப்பேன் என்றார். அந்தணர் வடிவிலிருந்த பெருமான் மீண்டும் ஒருமுறை செல்கின்றேன் எனக் கூறி தன் சொந்த வடிவில் பூதகணங்களுடன் பரவையர் இல்லம் சென்று நண்பன் நிலையைச் சொல்ல அவர் இசைவுதந்தார்.
ஆரூரர் மேல்கொண்ட நட்பால் அன்பால் இறைவன் இருமுறை தூது சென்றார். அதனால் அந்தவீதியே சிவமணம் கமழ்ந்தது.
திருப்பெருமங்கலம் என்ற ஊரில் பிறந்தார் ஏயர்கோன் கலிக்காமர். இறைவனிடத்தில் மாறாத அன்பும் அடிவர்கள்பால் அளவற்ற பக்தியும் கொண்டிருந்தார். சிவனை முழுமுதற் பொருளாக நினைத்திருந்தார். அவ்வாறு தான் வழிபடும் சிவனை நம்பி ஆரூரர் தன் மனைவி பொருட்டு தூது விடுவதை அறிந்து கோபப்பட்டார். அதிசயப்பட்டார். எரிச்சலுற்றார். இவரெல்லாம் ஓர் தொண்டரா. என்னால் இதைக் காதால் கேட்கவும் முடியவில்லை. அந்த ஆரூரர் என் முன்னால் வந்தால் என்ன நடக்கும் என எனக்கே தெரியாது என சீற்றம் கொண்டார்.
இறைவன் ஆரூரர்மேல் அன்பு கொண்டவர். அவர்மேல் தனக்குள்ள நட்பை கலிக்காமருக்குப் புரியவைக்க முடியவில்லை. நண்பனா, தொண்டனா, இருவரும் வேண்டும், எனவே இறைவன் தன் நாடகத்தை நடத்த தொடங்கினார். கலிக்காமருக்கு கடுமையான வயிற்று வலியைக் கொடுத்தார். சொல்லவொன்னா துன்பத்துக்கு ஆளாகி துடிதுடித்தார். அப்போது பெருமான் தோன்றி உன்னை வருத்தும் சூலையை ஆரூரர் வந்து தீர்க்காவிடில் உம் சூலை தீராது என்றார். அதைக் கேட்ட கலிக்காமர் கொதித்தார். ஆரூரர் வந்து அந்த நோய் தீரும் என்றால் அந்த நோய் தீரவே வேண்டாம் என்றார். இறைவன் ஆரூரர்பால் சென்று கலிக்காமர் உற்ற சூலையை நீ சென்று தீர்ப்பாய் என்றார். இறைவன் ஆணையை ஏற்று தான் வருவதை சொல்லி அனுப்ப, ஆரூரர் என் சூலையை தீர்க்க வருவதற்குள் நான்மாய்வேன். வயிற்றைக் கத்தியால் கீறிக்கொள்வேன் எனக்கூறி குத்த உயிர் பிரிந்தது.
ஆரூரர் வந்தார். கலிக்காமரின் மனைவி உயர்ந்த அடியாரான அவரிடம் தம் உணர்சிகளைக் காட்டாமல் எதிர்கொண்டழைத்தார். தான் கலிக்கமருடைய நோயை தீர்க்க வந்துள்ளேன் என்றார், அவர் மனைவி அவருக்கு எந்த துன்பமுமில்லை. அவர் உறங்குகின்றார் எனக்கூற எப்படியாயினும் நான் அவரைப் பார்க்கவேண்டும் என வற்புறுத்த குடல் சரிந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த கலிக்காமரை காண்பித்தனர். தன்பால் கொண்ட கோபத்தினால் இந்த முடிவு என்றால் அவர் சென்ற இடத்துக்கே நானும் செல்வேன் என உடைவாளை எடுத்து குத்திக்கொள்ளப் போனார். இறைவன் அருளினாலே கலிக்காமர் விழிப்புற்று நம்பி ஆரூரர் கரத்தைப்பற்றி நண்பனாக இருந்து நான் கெட்டேன் என வருந்தினார். நோய் நீங்கி இருவரும் திருபுன்கூரில் வழிபட்டு சிலநாள் அங்கிருந்தனர். ஆரூரர் திருவாரூர் சென்றார். ஏயர்கோன் கலிக்காமர் இறைபணிதொடர்ந்து சிவனடி சேர்ந்தார்.
ஆரூரரை தில்லையில் காணத்திட்டமிட்டு பயணம் மேற்கொண்டார் சேரமான். கோவிலை அடைந்து புலனும் உளமும் ஒன்றுபெற வழிபட்டார். ‘பொன்வண்ணத்தந்தாதி’ என்ற நூலைப்பாடினார். வன்தொண்டர் திருவாரூர் சென்றார் என்பதை அறிந்து அங்கு சென்றார். வழியில் உள்ள தலங்களை வழிபட்டுச் சென்றார். சேரமான் வருவதை அறிந்த ஆரூரர் எதிர்கொண்டழைத்தார். ஆரூரரை வணங்கி வீழ்ந்தார் அடியில். வாரியெடுத்து தழுவினார் ஆரூரர். இருவரும் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கி ஆரூரர் முன் ‘திருவாரூர் மும்மணிக்கோவை’ என்ற பாசுரம் பாடினார். சேரமானை அழைத்துக் கொண்டு பரவையர் இல்லம் வந்தார் ஆரூரர். நிறைகுடமும் பூமாலையும் கொண்டு வரவேற்றார் பரவையார். தன் குருநாதருடன் சரிசமமாக அமர்ந்து உணவு உண்ண அஞ்சினார். ஆரூரர் கைப்பற்றி சென்றார்.
இருவரும் மதுரை சென்று சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டனர். சேரமானை பாண்டியன் வரவேற்றார். பாண்டியன் சோழன்மகளை மணந்திருக்க சோழனும் அங்கிருந்தான். மூவேந்தர் புடைசூழ ஆரூரர் திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டார். வழியில் பல தலங்களை வழிபட்டு திருவாரூர் வந்தனர். சிலநாட்கள் கழித்து ஆரூரர் சேரநாடுவர வேண்டுகோள் விடுத்தான் சேரமான். இருவரும் திருவாரூரிலிருந்து புறப்பட்டு பல தலங்களை வழிபட்டு கண்டியூர் சென்றனர். காவிரியில் வெள்ளம். எதிர்கரையில் ஐயாறப்பர். பெருமானை வழிபட நினைத்த ஆரூரர் பதிகம் பாட ஆற்றுநீரை விலக்கி வழிகாட்ட ஆரூரரும் சேரமானும் ஒன்று சேர்ந்து ஐயாறப்பரை வழிபட்டனர்.
இருவரையும் வரவேற்ற சேரமக்கள் திரண்டு தோரணம் அமைத்து விழா செய்தனர். ஆரூரர் அஞ்சைக்களம் சென்று ‘முடிப்பது கங்கை’ என்று பதிகம் பாடினார். திருவாரூர் நினைவு வரவே சேரமானிடம் விடை பெற்றார். சேரமான் கொடுத்த பொன் பொருளோடு திருமுருகன் பூண்டி வந்தனர். எதிர்பாரவிதமாய் கொள்ளையர்கள் எல்லாவற்றையும் களவு செய்தனர். ஆரூரர், பெருமான் திருவருள் எப்படி இதற்கு அனுமதி தந்தது என்று வருந்தினார். திருமுருகன் பூண்டி இறைவனிடம் கோபமாக பதிகம் பாடி முடித்ததும் பூண்டி பெருமான் கொள்ளை அடித்த பொருளை எல்லாம் அவரிடம் கொடுத்தான்.
நேற்றுவரை நீவேண்டியது எல்லாம் நான் கொடுத்தேன். இன்று புதிய நட்பால் என்னை மறந்தாயோ. எனவே அதைக் கொள்ளையடித்து நான் தருவதாகவே இதனை தருகின்றேன் என்றார் இறைவன். ஆரூரர் திருவாரூர் சென்று புற்றிடம் கொண்டாரை வழிபட்டு இருந்தார்.
சேரமான் நினைவு வர சேரநாடு புறப்பட ஏற்பாடுகள் செய்து ஆரூர் பெருமானிடம் விடைபெற்றார். சோழநாட்டின் பல தலங்களையும் வணங்கி கொங்கு நாட்டின் அவிநாசியை அடைந்தார். அன்பர்களோடு நடந்து செல்லும்போது இரு வேறு உணர்வுகளை கண்டார்
ஓருவீட்டில் வாழைமரம் கட்டி மங்கல ஓசையும், எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்டது. இதன் காரணம் என்ன என்றார். அங்கிருந்தோர் இது அந்தணர்கள் வாழுமிடம். எதிர் எதிர் வீட்டில் இருந்த சிறுவர்கள் இருவரும் நண்பர்கள், ஏரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒருவனை முதலை காலைக் கவ்வி உள்ளே இழுத்தது. கரையில் இருந்தவனின் மங்கள நிகழ்ச்சி நடைபெறுகிறது. தங்கள் மகனுமிருந்தால் நாமும் தம் மகனுக்கு இப்போது பூணூல் அணிவிக்கலாமே என ஆதங்கத்தில் அழுகிறார்கள்.
நம்பிஆரூரர் வந்து பாதையில் இருக்கின்றார் எனக் கேட்டவர்கள் தங்களின் அழுகையை நிறுத்தி அதன் சுவடே தெரியாமல் வந்து வணங்கினர். அவர்களைப் பார்த்து இன்ப மைந்தனை இழந்தவர் நீரோ என்று அதிசயித்தார். துன்பத்தின் சாயல் இல்லாமல் எப்படி உங்களால் இருக்க முடிகிறது என்றார். அவர்கள் ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்ட எங்கள் செல்வன் வரப்போவதில்லை. தாங்கள் என்று வருவீர்கள் தங்களை எப்போது காண்போம் என ஏங்கிய எங்களுக்கு வரவே வராத பிள்ளையைவிட வராது போலிருந்து வந்த தெய்வமாகிய உங்கள் வருகை எங்களுக்கு இன்பம் தருவதாகும் என்றனர்.
இவர்களின் பக்தியைக் கண்ட ஆரூரர் அன்பு செலுத்துகின்ற நல்லோருக்குரிய துன்பத்தை நீக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு ஏரிக்கரைச் சென்று பார்த்தால் அங்கு தண்ணீரும் இல்லை. முதலையும் இல்லை. அங்கேயிருந்து அவிநாசி பெருமானை மனமுருகிப் பாடினார். பாடல் முடிந்தவுடன் ஏரியில் நீர் வந்தது. நீரிலே முதலை வந்தது. முதலை வாயிலேயிருந்து பிள்ளையும் வந்தது. அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அடியார்கள் இறை நாமத்தை சொல்லினர். ஆரூரர் சிறுவனை அழைத்துக் கொண்டு அவிநாசியப்பர் கோவிலில் பூணூல் அணிவித்தார். அங்கிருந்து சேரநாடு சென்றார்.
சேரமான் எதிர் கொண்டழைத்து இல்லத்திற்குச் சென்று அமுதருந்தி நலம் விசாரித்து இருந்தனர். பல சிவத்தலங்களை வழிபட்டு இன்புற்றிருந்தனர். சுந்தரர் விரைந்து குளத்தில் குளித்து அஞ்சைக்களத்து பெருமானை வணங்க சென்றார். சேரமான் குளத்தில் நிதானமாக நீராடினார்.
இறைவன் முன் பதிகம் பாடப்பாட ஆரூரருக்கு வாழ்வில் வெறுப்பு தொன்றியது. இது கயிலை நாதனுக்கு எட்டியதும் அவர் நம்பி ஆரூரானை வெள்ளானையின் மேல் ஏற்றிக் கொண்டு இங்கு வாரும் என்றார். வெள்ளயானை பூதகணங்களுடன் சுந்தரர் முன் வந்து இறைவன் கட்டளையைத் தெரிவித்தார்கள். ஆரூரர் யானையின் மீதேறும்போது பரவையாரை நினைக்கவில்லை. சங்கிலியாரை நினைக்கவில்லை. நட்பின் உயரவால் சேரமானை நினைக்க அதே நினைவு சேரமான் சிந்தையிலும் சேர்ந்தது.
தோழர் செயலையறியாது குதிரைமீதேறி அதன் கதில் ஐந்தெழுத்தை ஓத அதுவானில் எறியது. வன்தொண்டர் செல்லும் யானையை வலம் வந்து அதன் முன்னே சென்றது, பின்னே சென்றார் ஆரூரர். அப்போது இறைவன் கருணையை எண்ணி பத்து பாடல்கள் பாடினார்.
அவரை வரவேற்க இந்திரன், திருமால், பிரமன் மற்றுமுள்ள தேவர்கள் எல்லாம் வந்தனராம். முனிவர்கள் பெருமான் உலா வரும் வெள்ளையானை ஐராவதத்தில் வருபவர் யார் எனக் கேட்க எம்பெருமான் ‘நந்தமர் ஊரன்’ நம் உறவினன் ஆரூரன் என்றார்.
இருவரும் கயிலைமால் மலையில் பெருமான் வீற்றிருக்கும் மணிவாயிலை அடைந்தனர். சேரமான் அழைப்பின்றி சென்றதால் தடுக்கப்பட்டார். உள்ளே சென்ற ஆரூரரை ஆரூரனே வந்தாயா என்றார், இறைவா அடியேன் செய்த பிழைதனை பொறுத்து என்னைத் தடுத்தாட்கொண்டு நின் திருவடிப் பேற்றை வழங்கினயே எனச்சொல்லி பலமுறை வீழ்ந்து வணங்கி என் நண்பன் சேரலர் திருமணிவாயிலின் புறத்தே உளன் எனச்சொல்ல இறைவனும் சரி அழையுங்கள் என்றார். உள்ளே வந்த சேரமான் இறைவனை வணங்கி நான் வாயிலில் இருந்தபோது பாடிய பாடலை தாங்கள் செவிசாய்க்க வேண்டி அங்கே அரங்கேற்றினர்.
சேரமானின் பாடல் சாத்தனாரகிய ஐயப்பன் திருப்பிடவூரில் வந்து வெளியிட்டார். ஆலால சுந்தரர் பாடிய நிறைவு பதிகம் கடல் அரசன் கொண்டுவந்து திருஅஞ்சைக்களத்தில் வெளியிட்டான். கமலினி, அனிந்திதை இருவரும் மீண்டும் பிராட்டியரின் சேடியர்களாயினர்.
மண்ணுலகில் தோன்றிய நாம் இறைவனை உண்மை அன்போடு வழிபட்டால் இறைவன் தன் பொன்னுலகை அளிப்பான்.                                                                                                                                      “ஓம் நம்சிவாய”  

அந்த நால்வர்.....
1.திருஞானசம்பந்தர்/2.திருநாவுக்கரசர்/4.மாணிக்கவாசகர்

                                               ******

மாணிக்கவாசகர்

Written by

மாணிக்கவாசகர்
திருவாதாவூரிலே ஆமாத்தியப் பிராமணர் மரபில் சம்புபாதாசிருத-ருக்கும் சிவஞானவதியம்மை-க்கும் வாதாவூரார் பிறந்தார். பதினாறு வயதிற்குள் கல்வி கேள்விகளில் சிறந்து சைவ நூல்களையும் தத்துவ நூல்களையும், உலகியல் நூல்களையும் நன்கு அறிந்து பேரறிஞரானார். சைவ ஒழுக்கத்திலும் சிவனடியார் பக்தியிலும் இறைவழிபாட்டிலும் சிறந்து நின்றார்.
இவரின் மேன்மைதனைக் கேட்ட அரிமர்த்தன பாண்டியன் வாதாவூராரை அழைத்து ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டம் அளித்து தனது அரசவையில் முதல் அமைச்சராக்கிக் கொண்டான். அறிநெறி பிறழாமல் அரசு நடத்த துணை புரிந்தார். ஆயினும் அதில் பற்றின்றி பேரின்ப பெருவாழ்வு பெற உண்மை உணர்த்தும் ஞானாசிரியனை நாடி நின்றார்.
சோழநாட்டுக் கடற்கரையில் நல்ல குதிரைகள் விற்பனைக்கு வந்துள்ள செய்தியைத் தூதர்மூலம் அறிந்த அரசன் முதலமைச்சராகிய வாதாவூராரை அழைத்து அங்கு சென்று நல்ல குதிரைகளை வாங்கி வருமாறுப் பணித்து பெரும் பொருள் கொடுத்து அனுப்பினான். வாதவூரார் மதுரை மீனாட்சியம்மனையும் சொக்கலிங்கப்பெருமானையும் வணங்கிப் புறப்பட்டு சோழநாட்டுக் கடற்கரையை நோக்கிச் செல்லும்போது ஆவுடையார்கோயில் எனப்படும் திருப்பெருந்துறையை அடைந்தார்.
அப்போது அங்கிருந்த சோலையிலிருந்து ‘அர அர’ என்ற சிவநாம முழக்கம் முழங்குவதைக் கேட்டு மெய்மறந்தார். ஒலியின் வழி விரைந்து சென்றார். சிவபெருமான் வாதவூராரை ஆட்கொள்ளவெண்டி ஒரு சிவயோகியின் திருக்கோலங் கொண்டு சிவகணங்கள் சூழ குருந்த மரத்தடியில் அவர்களுக்குச் சிவஞானப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தார்.
காந்தங்கண்ட இரும்பைப்போல் வாதவூரர் ஈர்க்கப் பெற்றுத் தம் வசமிழந்து பரவசமாகி குருமூர்த்தியின் திருவடிகளில் வீழ்ந்து தம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டினார். இறைவன் அவருக்கு ஞானதீட்சை செய்து உண்மைப் பொருளை உபதேசித்தருளினார். அப்போது சிவஞானச் செல்வராக விளங்கிய வாதவூரர் உடல் பொருள் ஆவி ஆகிய மூன்றையும் குருமூர்த்திக்கு அர்ப்பணம் செய்து உள்ளக் கனிவோடு மாணிக்கமெனத் திகழ்ந்த வாசகத்தைப் பல பாடல்களால் பாடியருளினார். அதனைக் கேட்டு மகிழ்ந்த குருநாதர் வாதவூராருக்கு “மாணிக்க வாசகர்” என்ற திருநாமம் சூட்டித் தொண்டு செய்யும்படி பணித்துவிட்டு அடியார்களுடன் மறைந்தருளினார்.
மாணிக்கவாசகர் இறைவன் ஆணைப்படி மெய்த்துறவியாகி தாம் கொண்டுவந்த பொருளையெல்லாம் பெருந்துறைப் பெருமானுக்குத் திருக்கோவில் எடுக்கும் பணிக்கு தந்தார். பலநாட்கள் சென்றன. குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் பரிசனங்களுடன் வராமை கண்ட மன்னன் ஆள் அனுப்பி விசாரித்துவரச் சொன்னான். ஏவலர்கள் வாதவூரரின் நிலைபற்றிக் கூறினர். அரசன் சினம் கொண்டு குதிரைகளுடன் வருமாறு ஓலை அனுப்பினான். வாதவூரர் பெருமானிடம் சென்று முறையிட்டார். இறைவன், ‘நாம் ஆவணிமூலத்தில் குதிரைகளைக் கொண்டு வருகிறோம், நீ முன்னர் செல்க, இம்மாணிக்கக் கல்லை அரசனிடம் கொடு’ என்று கூறி ஒரு மாணிக்கக் கல்லையும் தந்தருளினார். அமைச்சர் வாதவுரார் அவ்வண்னமே அரசனிடம் சென்று மாணிக்கக் கல்லையும் தந்து ஆவணி மூல நாளில் குதிரைகள் அனைத்தும் வரும் என்றார். அரசன் மகிழ்வுற்று எதிர்நோக்கி இருந்தான். ஆவணி மூலத்திற்கு முன்னாள்வரை குதிரைகள் வாராமை கண்டு பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரைச் சினந்து சிறையிட்டான்.
அப்போது வாதவூரார் குருமூர்த்தியை நினைத்து “நன்றே செய்வாய், பிழை செய்வாய், நானே இதற்கு நாயகமே” என மனவுறுதியுடன் இருந்தார். அடியவர் துயரம் பொறாத இறைவன் காட்டிலுள்ள நரிகளையெல்லாம் பரிகளாக்கி ஓட்டிக்கொண்டு தாமே குதிரைச் சேவகனாக ஆவணி மூலத்தன்று மதுரைக்கு வந்தருளினார். அது கண்ட மன்னன் வாதவூரரை விடுவித்து போற்றிப் புகழ்ந்தான். குதிரைத் தலைவராக வந்த சோமசுந்தரப் பெருமான் குதிரையின் இலக்கணங்களை அரசனுக்குக் கூறி கயிறு மாற்றிக் கொடுத்து குதிரைகளை ஒப்படைத்து மீண்டார்.
அன்றிரவே பரிகளெல்லாம் நரிகளாகி இன்னல்கள் பல விளைவித்து ஊளையிட்டுக்கொண்டு காடு நோக்கி ஓடின. இதைக் கேட்ட மன்னன் மிக்க கோபங்கொண்டு மாணிக்கவாசகரை வைகைச் சுடுமண்ணில் முதுகில் கல்லேற்றி நிறுத்தித் தண்டிக்கச் சொன்னான். வாதவூரர் துன்பம் பொறுக்கலாற்றாது எம்பெருமானை வேண்டி நின்றார்.
அன்பர்க்கு அருளும் ஆலவாய்ப் பெருமான் உண்மை விளங்கும் பொருட்டு வைகையாற்றிலே வெள்ளம் பெருகச் செய்தார். வெள்ளம் கரைகடந்து மதுரை நகருக்குள் பாய்ந்தது. அதனைக் கண்டு மருண்ட பாண்டியன் குடிமக்களை வீட்டிற்கு ஒருவராய் வந்து கரையை அடைக்குமாறு கட்டளையிட்டான். குடிமக்களுள் வயது முதிர்ந்த பக்தி நிறைந்த வந்தி எனும் பிட்டுவானுச்சிக்கு ஆள் இன்மையால் அவள் வேண்ட சிவபெருமானே மண்வெட்டும் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்து கரையை அடைக்கச் சென்றார். ஆனால் அவர் கரையை அடைக்கவில்லை. மற்றைய ஏவலர்கள் அடைக்கும் கரையை சிதைத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடித் திருவிளையாடல் புரிந்தார். வந்தியின் பங்கு மட்டும் அடைபடாமல் இருந்ததைக் கண்ட பாண்டியன் வெகுண்டு வந்தியின் கூலியாளாக வந்த சிவபெருமானைப் பிரம்பால் அடித்தான். சிவபெருமான் கரையினை அடைத்து மறைந்தருளினார்.
பாண்டியன் பெருமானை அடித்த அடி அவன் முதுகிலும் மற்றைய எல்லா உயிர்கள் முதுகிலும் பட்டது. அரசன் இறைவன் திருவிளையாடலையும் மாணிக்கவாசர் பொருமையினையும் அறிந்து அவரைப் பிழை பொறுக்க வேண்டினான். மாணிக்கவாசகரும் பிழை பொறுத்துத் தம் அமைச்சர் பதவியை நீத்துத் திருப்பெருந்துறை, உத்தரகோசமங்கை, திருவாரூர், திருவிடைமருதூர், சீர்காழி, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம் ஆகிய தலங்களை வணங்கிப் பதிகங்கள் பாடிக்கொண்டு தில்லை அடைந்தார்.
மாணிக்கவாசகர் சிதப்பரத்திலே நடராசப் பெருமானை இடைவிடாது தரிசித்துப் பற்பல பதிகங்களைப் பாடிக் கொண்டு இருந்தார். அப்போது தில்லைவாழ் அந்தணர்களோடு வாதுக்கு வந்த புத்த குருவை இறைவன் ஆணையின்படி வாதில் வென்றார். ஊமைப் பெண்ணைப் பேச வைத்தார். புத்த குரு முதலானோர் சைவராயினர்.
ஒருநாள் நடராசப் பெருமான் அந்தண வடிவு கொண்டு மாணிக்கவாசகரிடம் சென்று திருவாசகம் முழுமையும் ஓதச் செய்து தமது ஓலைச் சுவடியில் அவற்றை எழுதிக் கொண்டு திருக்கோவையாரையும் சொல்லச் செய்து, அதனையும் சுவடியில் எழுதிக் கொண்டு, “மாணிக்கவாசகன் சொல்ல அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது” எனக் கையொப்பமிட்டு அதனைக் கனகசபையின் பஞ்சாக்கரப்படியிலே வைத்து விட்டு மறைந்தருளினார்.
மறுநாள் காலயில் தில்லைவாழ் அந்தணர் பஞ்சாக்கரப்படியிலே சுவடியைக் கண்டு அதிசயத்து சுவடியில் அம்பலவாணன் கையெழுத்திடிருப்பதை உணர்ந்து மாணிக்கவாசகரிடம் சென்று விபரம் அறிந்தனர். பின்னர் அவரை இப்பாடல்களின் பொருளைத் தெரிவிக்க வேண்டினர். மாணிக்கவாசகர் தில்லைவாழ் அந்தணர்களை அழைத்துக்கொண்டு பொற்சபையை அடைந்து தில்லைத் திருக்கூத்தனைச் சுட்டி இவரே இத்திருவாசகத்திற்குப் பொருள் என்று காட்டி சிவபெருமானது திருவடிச் சோதியில் இரண்டறக் கலந்தார். அந்தநாள் ஆனிமக நாளாகும்.
திருப்பெருந்துறையில், உத்திரகோசமங்கையில் மாணிக்கவாசகர் சன்னதி. 

                                           

அந்த நால்வர்.....
1.திருஞானசம்பந்தர்/2.திருநாவுக்கரசர்/3.சுந்தரர்

                                           ******

 

 

நால்வர்

Written by

ஓம்சிவாயநமக!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
0=0=0=0=0=0

நால்வர்
சைவ நெறியைப் பரப்ப உறுதிபூண்டு செயலாக்கம் கொண்டவர்களில் முதன்மை ஆனோர் நான்கு பேர்கள். அவர்களை நாம் நால்வர் பெருமக்கள் என அன்புடன் அழைக்கின்றோம். அவர்களில் முதல் மூவரும் அறுபத்திமூவர் நாயன்மார்கள் என அழைக்கப்படும் பெருமக்களில் ஒருவராகத் திகழ்கின்றனர். இந்நால்வரும் கீழ்கண்ட பதினாரையும் தங்களுடைய சிந்தையிலும் செயலிலும் மேற்கொண்டு வாழ்ந்தனர்.
அன்பர் தீது செய்யினும் சிவச்செயல் எனக் கொள்ளும் தெளிவும்
ஏமுறும் பரதார நச்சிடாத நன் நோன்பும் தூய்மையும்
கனவிலும் உனது அன்பருக்கு அடிமையாங் கருத்தும்
தீமையாம் புறச் சமயங்கள் ஒழிந்திடு திறனும்
நல்லறஞ் செய்பவர் தங்களோடு உறவு
நல்லுபதேச மெய் உறுதியும்
நினைவில் வேறொரு கடவுளை வழிபடா நிலையும்
நெஞ்சில் யான் எனது என்னுஞ் செருக்குறாத் துறவும்
பிறவி தீ தெனாப் பேதையர் தம்மோடு பிணக்கும் உறுதி 
புனித நின்புகழ் நாள்தோறும் உரைத்திடும் பொழிவும்
மனமும் நறுகண் ஐம்புலன்களுக்கு ஏவல் செய்யுறாச் சத்துரும்
மனமும் வாக்கும் நின் அன்பர்பால் ஒப்பிடு செயலும்
மா தவத்தினோர் ஒப்பினும் வணங்கிடும் மகிழ்வும்
யாது நல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பு
வாய்மையாகவே பிறர்பொருள் விழைவுறா வானும்
இறக்கினும் பிறக்கினும் இன்பம் தூய்க்கினும் 

பிறைக் கொழுந்தணிசடையப் பெரும்.
அவர்களின் திரு நட்சத்திரம்

சித்திரைச் சதயம் அப்பர் சிறந்தவை காசிமூலம்
அத்தரைப்பணி சம்பந்தர் ஆனிமா மகத்தில் அந்த
முத்தமிழ் வாதவூரார் முதியநல் ஆடிதன்னில் 
சுத்தமாஞ்சோதி நாளில் சுந்தரர் கயிலை சேர்ந்தார்.

அவர்களின் வயது

அப்பருக்கெண்பத்தொன்று அருள் வாதவூரருக்குச்
செப்பிய நாலெட்டில் தெய்வீகம்- இப்புவியில்
சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்கு 
அந்தம் பதினாறு அறி.

அவர்களுக்கான துதி

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக்கன் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரார் திருத்தாள் போற்றி


மண்ணுலகில் பிறந்த நாம் இறைவனை உண்மை அன்போடு வழிபட்டால் இறைவன் தன் பொன்னுலகை அளிப்பான். மேலும் அடியார்களை சிவமாகவே எண்ணிப் போற்றி வணங்கினால் சிவனடியை எளிதில் சென்றடையலாம் என்பதே அவர்களின் செய்தியாகும். வாழ்க அவர்தம் சைவத் தொண்டு.

அந்த நால்வர்.....
 1.திருஞானசம்பந்தர்/2.திருநாவுக்கரசர்/3.சுந்தரர்/ 4. மாணிக்கவாசகர்

 

அகத்திய சித்தர்

Written by

அகத்திய சித்தர்


தாரகன் முதலிய அரக்கர்கள் உலகில் மக்களைத் துன்புறுத்த அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்னி ஆகியோர் பூமிக்கு வந்தத்தை அறிந்த அரக்கர்கள் கடலுக்கடியில் ஒழிந்து கொண்டார்கள். இந்திரன் யோசனைப்படி அக்னி வாயுவும் கூடி பூமியில் அகத்தியராய் அவதரித்தார் என்றும் மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியர் தோன்றியமையால் கும்பயோனி, குடமுனி என்றார் என இருவித கருத்துக்கள் உள்ளன. அகத்தியர் சமுத்திர நீர் முழுவதும் குடித்துவிட இந்திரன் அசுரர்களை அழிக்க அகத்தியர் கடல் நீரை கடலுக்குள் விடுவித்தார்.
நீரின்மேல் பன்னிரண்டு ஆண்டுகள் படுத்தபடியே தவமிருந்து அரிய சக்திகளைப் பெற்றார். சிவபெருமானின் திருமணத்தின்போது அனைவரும் ஒருங்கே கைலையில் திரண்டதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதைச் சமப்படுத்த அகத்தியர் சிவபெருமானால் தென் திசைக்கு அனுப்பப்பட்டார். வழியில் மேருமலைக்குச் செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்தது. இராமபிரானுக்கு சிவயோகத்தை அருளினார். சுவேதன் என்பவன் பிணந்திண்ண பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தான் வந்தபோது கவனியாமல் யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். தன் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டையடைந்து அரசுமகள் உலோபையை மணந்து தென்புலத்தார் கடனை அடைத்தார்.
தென்திசைக்கு வந்து முருகன் அருள்பெற்று “அகத்தியம்” என்ற இலக்கண நூலை எழுதினார். இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரனால் ஏற்பாடு செய்த நடன நிகழ்ச்சியில் நடனமாடிய ஊர்வசி இந்திரன் மகன் சயந்தினடம் ஏற்பட்ட காதலால் தன்னிலை மறக்க கோபம் கொண்ட அகத்தியர் சயத்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்க சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்ற அரக்கர் வேதியர் உருவம் கொண்டு வழியில் செல்லும் வேதியர் முனிவர்களை விருந்துக்கழைத்து வாதாபி என்ற அரக்கனை கறியாக சமைத்து உண்ணவைத்து வாதாபியை திரும்ப அழைக்க அவன் பெற்றிருந்த சக்தியால் அவன் உணவு உண்டவரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வந்து விடுவான். இதுபற்றி முனிவர்கள் அகத்தியரிடம் கூற அவர் வில்வளவன் இருக்குமிடம் சென்றார். மற்ற முனிவர்போல் இவருக்கும் வாதாபியை கறியாக சமைத்து உணவு கொடுக்க அதைச் சாப்பிட்ட அகத்தியர் வில்வளவன் வாதாபியைக் கூப்பிடும்போது ‘வாதாபே ஜீர்ணபவ’ எனக்கூற வாதாபியின் சக்தி மறைந்து அவனும் மறைந்தான். உண்மை அறிந்த வில்வளவன் மன்னிப்பு கேட்டான்.
சிவபூஜை செய்ய கமண்டலத்தில் வைத்திருந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உருவில்’ கவிழ்த்துவிட அந்த நீரே காவிரி ஆனது. இசையில் சிறந்த இராவணனை தம் இசைத் திறத்தால் வென்றார். காவிரிப் பூம்பட்டிணத்தில் இந்திரவிழாவை ஆரம்பித்துவைத்தார். புதுச்சேரி அருகிலுள்ள ‘உழவர் கரையில்’ ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக்கழகத்தில் தமிழ் போதித்தார். அந்த பகுதி அகஸ்தீஸ்வரம் என அழைக்கப்படுகிறது. அங்கு ஓர் சிவாலயம் எழுப்பப்பட்டு இறைவன் அகத்தீஸ்வரமுடையார் என அழைக்கப்படுகிறார்.
இறுதியில் அகத்தியர் எங்கு சமாதியடைந்தார் என்பது தெரியவில்லை.
அகத்தியர் வெண்பா, வைத்தியக் கொம்மி, வைத்திய ரத்னாகரம், வைத்தியக் கண்ணாடி, வைத்தியம் 1500, வைத்தியம் 4600, செந்தூரன் 300, மணி 4000, வைத்திய சிந்தாமணி, கர்ப்ப சூத்திரம், ஆயுள் வேத பாஷ்யம், வைத்திய நூல்கள் பெருந்திரட்டு, பஸ்மம் 200, நாடி சாஸ்திரம், பக்ஷணி, கரிசல் பஸ்யம் 200 ஆகிய மருத்துவ நூல்களையும், சிவசாலம், சக்தி சாலம், சண்முக சாலம், ஆறெழுத்தந்தாதி, காம வியாபகம், விதி நூண்மூவகை காண்டம், அகத்தியர் பூசாவிதி, அகத்தியர் சூத்திரம் 30 ஆகிய தத்துவ நூல்களையும் எழுதியுள்ளர். அகத்தியரின் சமரச நிலை ஞானம் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகளைப் பற்றியதாகும். அகத்தியம் என்ற ஐந்திலக்கணத்தில் 18 வகையான மனநோய்கள் பற்றியும் அதற்குரிய மருந்துகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.                                                                                                            

அகத்தியர் தியானப்பூசைக்கு                                                    

“ஐந்திலக்கணம்தந்த அகத்தியரே, சித்தவேட்கைகொண்ட சிவயோகியரே, கடலுண்ட காருண்யரே, கும்பமுனி குருவே சரணம் சரணம்.”

தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் அகத்தியர் திரு உருவப்படத்தை வைத்து இருமுக தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து மலர்களாலும் வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை ஆகிய பச்சிலைகளாலும் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அகத்தியம் தந்த அருளே போற்றி
அசுரர்களை அழித்தவரே போற்றி
இசைஞான சோதியே போற்றி
இராமனுக்கு சிவயோகம் அருளிய போற்றி
இன்னல்கள் போக்கி இன்பம் தரும் பெருமானே போற்றி
உலோப முத்திரையின் பதியே போற்றி
காவிரி தந்த கருணையே போற்றி
கும்பத்திலுதித்த குறுமுனியே போற்றி
சித்த வைத்திய சிகரமே போற்றி
சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி
சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி
தென்திசை, வடதிசையை சமப்படுத்தியவரே போற்றி
தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி
விந்தியமலையின் அகந்தையைப் போக்கியவரே போற்றி போற்றி
நிவேதனமாக பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப் பொங்கல், இளநீர் இவற்றுடன் பச்சை வஸ்திரம் அணிவித்து புதன் கிழமை வழிபடுவது சிறப்பு.
தியானபூசைப்பலன்கள்
புதன் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் புதன் பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். இசை, கவிதையில் மேன்மை ஏற்படும். கல்வித்தடை நீங்கும். முன்வினை பாபங்கள் குறையும். பித்ரு சாபங்கள் நீங்கி ஆசி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். சகலவிதமான நோய்கள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பேரும் புகலும் தேடிவரும்.-குருஸ்ரீ பகோரா.

“ஓம் ஸ்ரீம் அகத்திய மாமுனியே போற்றி

******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள் 

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

 

 

அகப்பேய் சித்தர்

Written by

அகப்பேய் சட்டமுனி சித்தர்

 

திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றியவர். இயற்பெயர் நாயனார். நெசவுத்தொழில் செய்து வந்தார். நிறையப் பொருள் ஈட்டமுடிந்தாலும் அந்த ஆசை குறைந்து அருள் பெற விரும்பினார். தனக்கு சரியான குருவைத்தேடினார். காட்டில் ஒருநாள் ஒரு சோதி மரத்தைக் கண்டார். அங்கிருந்த பொந்தில் புகுந்து கொண்டு வியாசரை நினைத்து தவம் இருந்தார். வியாசர் நேரில் தோன்றி தவப்பயனையும் அரிய மந்த்ர உபதேசங்களையும் அருளினார். அன்று முதல் அகப்பேய் சித்தர் எனப்பட்டார்.

மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் முறை, தீய எண்ணங்கள் ஆகியன நீக்க ‘அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 90’ மற்றும் அகப்பேய் பூரண ஞானம் என்ற நூல்களை எழுதினார்.

“அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நஞ்சுண்ணவும் வேண்டாம், நாதியற்றுத்திரியவும் வேண்டாம். அந்த இறைவன் உன்முன் தோன்றுவான்” என்பது இவரின் கருத்து.

அகப்பேய்சித்தர் தியானப்பூசைக்கு

இலை உடையுடன் கலை உருவாய் காட்சிதரும் காரியசித்தி சுவாமியே

மாறாத சித்தியை மரப்பொந்தினில் பெற்ற மங்காச் செல்வரே

அசைகின்ற புத்தியை இசைகின்ற சித்தியால்

இனிதுகாப்பாய் அகப்பேய் சித்தரே.

தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் அகப்பேய் சித்தர் திரு உருவபடத்தை வைத்து குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து மலர்களாலும் வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை ஆகிய பச்சிலைகளாலும் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.

உயிர்களைக் காப்பவரே போற்றி

உலக ரட்கரே போற்றி

கஜபூஜை செய்பவரே போற்றி

சங்கீதப்பிரியரே போற்றி

சந்தான தோஷத்தைப் போக்குபவரே போற்றி

சாந்தமானவரே போற்றி

சூரிய சந்திர பிரகாசமுடையவரே போற்றி

பித்ருப்ரியரே போற்றி

பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி

வன சஞ்சாரியே போற்றி

ஹஸ்த தரிசனம் செய்தவரே போற்றி

ஸ்ரீ சக்ர சுவாமியே போற்றி போற்றி

நிவேதனமாக பழங்கள், பால், வடிகட்டிய இளநீர் இவற்றுடன் மஞ்சள் வஸ்திரம் வைத்து வியாழக்கிழமை வழிபடின் சிறப்பு,

தியானபூசைப்பலன்கள்

வியாழன் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் குருபகவானல் ஏற்படக்கூடிய தோஷங்கள் அகலும். பணப்பிரச்சனை, புத்திரப் பாக்கிய கோளாறு, அரசாங்க பிரச்சனை ஆகியவை நீங்கும். வியாபாரநஷ்டம் விலகி லட்சுமி கடாட்சம் பெருகும். குடல் சம்பந்தமான நோய்கள் நீங்கும். கொடுக்கல் வாங்கல் வழக்குகள் தீரும். வறுமை அகல வேலை வாய்ப்பு கிட்டும்.-குருஸ்ரீ பகோரா.

“ஓம் ஸ்ரீ சக்ர அகப்பேய் சட்டமுனி சுவாமியே போற்றி”

                                  ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

 

இடைக்காட்டு சித்தர்

Written by

இடைக்காட்டு சித்தர்

 

தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஊரில் பிறந்தார். ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்து வந்தார் இடைக்காடர். அவைகளை மேய விட்டு சிந்தனைவயப்பட்டு மரத்தடியில் அமர்ந்து அமைதியாய் இருப்பார். ஒருநாள் இவ்வாறு அமர்ந்திருக்கையில் வான்வழி சென்ற சித்தர் ஒருவர் கீழிறங்கி நீர் என்ன சிந்தித்துக் கொண்டிருந்தாய் என வினவினார்.

சுயநினைவிற்கு வந்தவர் அவருக்கு பால் கொடுத்து தாகம் தீர்க்க, மனம் மகிழ்ந்த சித்தர் இவருக்கு வைத்தியம், சோதிடம் ஞானம், யோகம் முதலியன உபதேசித்து மறைந்தார். அன்று முதல் இடைக்காட்டுச் சித்தர் ஆனார். அந்த திறமைகளால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குபின் ஏற்படும் பஞ்சத்தை அறிந்தார்.

முன்னெச்சரிக்கையாக எக்காலும் கிடைக்கும் எருக்க இலைகளைத் திண்ண ஆடு மாடுகளுக்கு பழக்கினார். கெடாமல் இருக்கக்கூடிய குருவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். எதிர்பார்த்தபடி பஞ்சம் வந்தது. புல்பூண்டுகளும் அழிந்தன. எருக்க இலைகளைத் தின்றதால் ஏற்படும் அரிப்பை போக்க ஆடுகள்சுவரில் உடம்பைத் தேய்க்கும்போது சுவரிலிருந்து உதிரும் குருவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு உயிர் வாழ்ந்தார். பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிய இடைக்காடரும் அவருடைய ஆடுகளும் உயுருடன் இருப்பதைக் கண்ட நவகிரகங்கள் இவரைப் பார்க்க வந்தனர்.

அவர்களை வரவேற்று வரகு சாதத்தையும் ஆட்டுப்பாலையும் கொடுத்தார். பாலில் சமைத்த உணவை உண்டு அவர்கள் அப்படியே உறங்கி விட்டனர். நவகிரகங்கள் மயங்கி படுத்திருப்பதைக் கண்ட இடைக்காடர் தன் சோதிட அறிவிற்கேற்றவாறு மழை வருவதற்கான முறையில் கிரகங்களை இடம் மாற்றிப் படுக்கவைத்தார். கிரக நிலைகள் மாறியதால் வானம் இருண்டு மழை பொழியத்தொடங்கியது. பூமி குளிர்ந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிறைந்தன.

மழையின் குழுமை நவகிரங்களை எழுப்பியது. நாட்டின் பஞ்சத்தைப் போக்கிய சித்தரின் திறமையை பாராட்டினார்கள். மேலும் வரங்கள் கொடுத்து அவரை ஆசிர்வதித்தனர். பல ஆண்டுகள் வாழ்ந்து திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.

வருடாதி, மருத்துவ, தத்துவப் பாடல்கள், ஞானசூத்திரம் 70 ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இடைக்காட்டுச் சித்தர் தியானப்பூசைக்கு

“ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து அபலைகளுக்

அருளிய கோணார்பெருமானே ஓடுகின்ற கிரகங்களை கோடு

போட்டு படுக்கவைத்த பரந்தாமனின் அவதாரமே, மண்சிறக்க

விண்சிறக்க கடைகண் திறந்து காப்பீர் இடைக்காடர் சுவாமியே”

தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் ஸ்ரீஇடைக்காடர் சித்தர் திரு உருவப் படத்தை வைத்து குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து தென்னம் பூ மற்றும் மல்லிகை மலர்களாலும் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.

அங்குசம், அபயவரம் உடையவரே போற்றி

இளநீர் பிரியரே போற்றி

ஒளிமயமானவரே போற்றி

கருவைக் காப்பவரே போற்றி

கருணா மூர்த்தியே போற்றி

கால்நடைகளைக் காப்பவரே போற்றி

கிருஷ்ணணை தரிசிப்பவரே போற்றி

தேவலீலைப் பிரியரே போற்றி

பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி

பூலோகச் சூரியனே போற்றி

ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்ரி

ஸ்ரீ லட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி போற்றி.

நிவேதனமாக பழங்கள், பால், வடிகட்டிய இளநீர் இவற்றுடன் பச்சை வஸ்திரம் வைத்து புதன்கிழமை வழிபடின் சிறப்பு,

தியானபூசைப்பலன்கள்

புதன் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் புதன் பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி பலன் ஏற்படும். சரியாக படிக்கமுடியாத கல்வித்தடைகள் அகலும். வியாபாரத்தில் ஈடுபட்டோருக்குள்ள பிரச்சனைகளைச் சமாளிப்பர். கற்பனைத்திறன் கூடி கவித்திறம் பெறுவர். அரசாங்க வரிப் பிரச்சனைகள் சுமுகமாகத்தீரும். புத்திசாலித்தனம் அதிகமாகும். பிள்ளைவரம் கிட்டும். தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.

“ஓம் ஸ்ரீம் எல்லாம் வல்ல ஸ்ரீ இடைக்காட்டுச் சித்த சுவாமியே போற்றி”

                                         ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

 

 

உரோமரிஷி சித்தர்

Written by

உரோமரிஷி சித்தர்

 

புசுண்ட மாமுனிவரின் சீடராவர். உடல் முழுவதும் ரோமம் இருந்தபடியால் உரோமமுனி எனப்பட்டார். இவர் உடலிருந்து ஓர் ரோமம் உதிர்ந்தால் அதுபிரம்மாவின் ஒரு வாழ்நாளாகும். அவ்வாறு மூன்றரைக்கோடி ஆண்டுகள் பிறகுதான் இவருடைய வழ்நாள் முடியும்.

கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கியிருந்து தவம் செய்து தாடி வழியே பொன் வரவழித்து மக்களுக்கு கொடுத்து வந்தார். ஒருநாள் தாடிவழி பொன் வருவது நின்றுவிடவே அந்த தாடியை உடனே நீக்கி இறைவனை வழிபட நீராடாமல் கோவிலை அடைந்தார். நீராடாமல் வந்த உரோமரிஷியை விநாயகரும் முருகரும் தடுத்தனர். முனிவர் வருத்தமுற்று கோபுர வாயிலில் நின்றார். புறத்தூய்மையைவிட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்பிக்கும் வண்ணம் உரோமரிஷிக்கு சிவபெருமான் கோவிலுக்கு வெளியிலேயே தரிசனம் தந்தார். கயிலை சென்றார்.

வைத்தியம் 1000, சூத்திரம் 1000, ஞானம் 50, பெருநூல் 500, குறுநூல் 50, காவியம் 500, முப்பு சூத்திரம் 30, இரண்டடி 500, ஜோதிட விளக்கம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

உரோமமுனி சித்தர் தியானப்பூசைக்கு

“கனிந்த இதயம், மெலிந்த உருவம், சொரிந்த கருணை,

சொல்லில் அடங்குமோ? அலையும் மனதை

அடக்கி அருள் அள்ளியே தருவாய் தாடியில்

தங்கம் தந்த தெய்வமே தங்கள் திருவடி சரணம்”

தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் ஸ்ரீ உரோமரிஷி திரு உருவப் படத்தை வைத்து குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து வில்வம், ஜாதிமல்லிகை மற்றும் மல்லிகை மலர்களாலும் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.

உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி

காலத்தை கடந்தவரே பொற்றி

காகபுஜண்டரால் பூசிக்கப்படுபவறே போற்றி

கைலாயத்தில் வாசம் செய்யும் உரோமரிஷியே போற்றி

சங்கீதபிரியரே போற்றி

சந்திரனை தரிசிப்பவரே போற்றி

சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி

சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி

மகாலட்சுமியின் அருள் பெற்றவரே போற்றி

முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி

தடைகளை நீக்குபவரே போற்றி

தெய்வீகச் சித்தரே போற்றி போற்றி

நிவேதனமாக இஞ்சி இல்லா மிளகு, சீரகம் கலந்த பொங்கல், பழங்கள் இவற்றுடன் வெள்ளை வஸ்திரம் வைத்து திங்கள்கிழமை வழிபடின் சிறப்பு,

தியானபூசைப்பலன்கள்

சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் சந்திர கிரக தோஷங்கள் நீங்கும். மன வியாதி, மன அழுத்தம், மனப் புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். முடிவெடுக்கமுடியாத குழப்பங்கள் நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும். சஞ்சல புத்தி நீங்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் குறைந்து மகிழ்ச்சி நிலவும். படிப்பிலும் தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படும்.

“ஓம் கைலாய வாசி ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி”

                                         ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

கோரக்கர் சித்தர்

Written by

கோரக்கர் சித்தர்

 

வடமாநிலத்தைச் சேர்ந்தவர் கோரக்கர். தமிழ்நாட்டில் சதுரகிரியை அடைந்து போகரை தோழராகக் கொண்டவர். சட்டைமுனி மற்றும் கோரக்கர் இவருக்கு நெருக்கமானவர்கள்.

சிவபெருமான் உமாதேவிக்கு கடற்கரையில் தாரக மந்திரத்தை உபதேசித்தபோது தேவி கண்ணயர்ந்திருக்க மீன் குஞ்சு ஒன்று அதைக் கேட்டு மீன் வடிவமாகியது. சிவன் அதை மச்சேந்திரன் எனப்பெயரிட்டு ஞானத்தை அருள் புரிய அனுப்பினார். ஓர் ஊரில் இவருக்கு மனக்குறையுடன் ஒரு பெண் பிச்சை போட்டதை யோகத்தால் அறிந்து அவள் மகப்பேறு இல்லாமல் வருந்துவதைக் கேட்டு அறிந்தார்.

மச்சேந்திரர் அந்தப் பெண்ணிடம் சிறிது திருநீறு கொடுத்து இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேறு அடைவாய் என்றார், அவள் திருநீறு பெற்றதை கேட்ட பக்கத்து வீட்டுப்பெண் அது போலியாக இருக்கும் என்று சொல்லியதால் அடுப்பில் போட்டுவிட்டாள். சில ஆண்டுகள் கழித்து அவ்வூருக்கு வந்த மச்சேந்திரர் அப்பெண்ணை அழைத்து உன் மகனைக்கூப்பிடு என்றவரிடம் தான் பக்கத்துவீட்டுபெண் பேச்சைக்கேட்டு அதை அடுப்பில் போட்டதாகக் கூற மச்சேந்திரர் அந்த அடுப்பு இருந்த பக்கம் சென்று ‘கோரக்கா’ எனக் கூப்பிட்டார். மச்சேந்திரர் நீறு கொடுத்த காலம்முதல் இது வரை என்ன வளர்ச்சியிருக்குமோ அதே வளர்ச்சியுடன் ஒரு சிறுவன் கப்பதார அடுப்புச் சாம்பலிலிருந்து வந்தவனை சீடராக்கிக் கொண்டார்.

ஒருநாள் கோரக்கர் பிச்சை எடுக்கும்போது ஓர் பெண்மணி வடை ஒன்றை அளிக்க அதை தன் குருநாதரிடம் அளித்தார். அடுத்த நாளும் அதே போல் வடைவேண்டும் என குருநாதர் கேட்க, வடைதந்த வீட்டிற்கு சென்று வடை கேட்டார். அந்தப் பெண் வடை இல்லை. தினமும் வடை சுட முடியுமா. இன்று தயிர்சாதம் தான் இருக்கின்றது என்று சொல்ல, கோரக்கர் என் குருநாதர் வடைதான் கேட்டார் என்றார். அந்த பெண் வடை என்பதால் பரவாயில்லை. இதுவே அவர் உன் கண்ணைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பாயா என்றாள். அதற்கு கோரக்கர் என் குருநாதர் எதைக் கேட்டாலும் நான் தருவேன் என்று தன் கண்ணை பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்து அதற்கு பதிலாக வடை கேட்டார். அவரின் உணர்சியைக் கண்ட அப்பெண் வடைகளை சுட்டு தந்தாள். வடையைச் சுவைத்த மச்சேந்திரர் கோரக்கா உன் கண் என்ன வாயிற்று என்றார். கோரக்கர் நடந்ததைக் கூறினார். கோரக்கரின் அன்பை அறிந்த மச்சேந்திரர் அவருக்கு மீண்டும் கண்வரச் செய்தார்.

மச்சேந்திரர் மலையாள நாட்டிற்கு சென்று அந்நாட்டு அரசி பிரேமலா என்பவரை மணந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். அவர்களுக்கு மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனை அறிந்த கோரக்கர் அங்கிருந்து தன் குருவை எப்படியும் கூட்டி வந்துவிட வேண்டும் என மலையாள நாட்டை அடைந்தார். குருவைப் பார்த்து குருவே புறப்படுங்கள் நம் இருப்பிடம் செல்வோம் என்றார். வழிச்செலவிற்கு என பிரேமலா ஒரு தங்கக் கட்டியை மச்சேந்திரரிடம் கோரக்கருக்குத் தெரியாமல் கொடுத்தார்.

வழியில் எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர் பயம் உண்டோ எனக் கேட்டுக் கொண்டே சென்றார் மச்சேந்திரர். இதைக் கவனித்த கோரக்கர் குரு அறியாமல் அந்த தங்ககட்டியை எடுத்து வீசீனார். அதற்கு பதில் ஒரு செங்கல்லை வைத்தார். ஒருநாள் பையைத்திறந்த மச்சேந்திரர் செங்கல்லைக் கண்டு கோரக்கர் மீது கோபமுற்றார். என்னுடைய பொருளை கைப்பற்றிய நீ என்னுடைய சீடனல்ல. இனி நீ என்னுடன் சேராதே என்றார்.

குருவை நல்வழிப்படுத்த எண்ணிய கோரக்கர் ஒரு சிறிய மலைமீது ஏறி சிறு நீர் கழித்தார். அந்தமலை தங்க மலையானது. கோரக்கர் குருவைப்பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அறியாமையில் உலன்ற மச்சேந்திரரைப் பிடித்த மாயை விலக மனம் தெளிவு பெற்று சீடரைப் பாராட்டினார். எனினும் கோரக்கர் தனியே பிரிந்து சென்று தவம் புரிந்து அஷ்டமாசித்திகளையும் காய சித்தியையும் பெற்றார்.

கோரக்கர் திருக்கயிலை சென்றார். அங்கு எதிர்பட்ட ஒருவரை (அல்லாமாதேவர்) நீங்கள் யார் என்றார். அவர் இறந்து போகும் உடலில் பற்று கொண்டுள்ளவரை மதித்து சொல்லத்தக்கது ஒன்றுமில்லை என்றார். கோரக்கர் நான் குருவின் அருளினால் காயசித்தி பெற்றவன் என்றார். அல்லாமாதேவரோ காய சித்தி வாழும் நாளைத்தான் அதிகமாக்கும் அன்றி நிலைத்திருக்க உதவாது, இதை அழியா உடல் எனக்கூறுவது வீண் என்றார்.

வீண் தர்க்கம் வேண்டாம். இதோ நிறுபித்துக் காட்டுகின்றேன் எனக்கூறி அல்லாமாதேவரிடம் ஓர் வாளினைக் கொடுத்து உன் தோள் வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் வெட்ட உடலின் மீது பட்டவாள் கிண் என்ற ஒலியுடன் தெரித்தது. உடம்பில் எந்த காயமும் ஏற்ப்படவில்லை. நல்லது நீ உன் திறமையை நிரூபித்தாய். இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டு என்றார்.

கோரக்கர் வெட்ட வாள் அல்லமரின் உடலில் புகுந்து வந்தது. வெட்டும்போது காற்றை வெட்டுவது போலிருந்தது. கோரக்கர் உண்மை உணர்ந்து தன்னைவிட சக்தி மிகுந்த அல்லாமாதேவரை வணங்கி தன் தவறை ஒப்புக்கொண்டான். உடம்பிலுள்ள பற்றைநீக்கி உனது உண்மை நிலையை அறிவாய் என்றார்.

கோரக்கர் வரதமேடு எனும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியைச் சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் தவம் செய்து அரிய சித்திகளை அடைந்து ஐந்தொழிலை இயக்கும் ஆற்றல்பெற யாகம் செய்யத்தொடங்கினர். யாகத்திலிருந்து இரண்டு அழகான பெண்கள் வந்தனர். அப்போது அங்கு வந்த அக்னியும் வாயுவும் அப்பெண்களை மோகித்து நின்றனர். யாகத்தை தடைசெய்த அந்த அப்பெண்கள்மேல் கோபங்கொண்டு கமண்டல நீரைத் தெளிக்க ஒருபெண் புகையிலை (பிரம்மபத்திரம்) செடியாகவும் மற்றொருத்தி கஞ்சா செடியாகவும் மோகித்த அக்னியும் வாயுவும் நெருப்பும் நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தனர். சிவபெருமான் தோன்றி இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் உண்டாக்கிய இந்த செடிகள் மூலிகைகளாகத் திகழும் என்றார்.

கோரக்கர் எங்கு சித்தியடைந்தார் எனத் தெரியவில்லை. (பேரூர் / புதுச்சேரி கோர்காடு)

கோரக்கர் தான் அறிந்த ஞானங்களையெல்லாம் வெளிப்படையாகப் பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்து விடக்கூடாது என்று நினைத்த சித்தர்கள் அவரது ஆசிரமத்திற்கு வந்தனர். கோரக்கர் அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். அதனை சாப்பிட்டவர்கள் மயங்கினர். அப்போது முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்து கிடைத்ததை எடுத்துச் சென்றனர்.

கோரக்கர் சந்திரரேகை, நமநாசத்திறவுகோல், ரக்ஷமேகலை, முத்தாரம், மலைவாக்கம், கற்பம், முத்திநெறி, அட்டகர்மம், சூத்திரம், வசார சூத்திரம், மூலிகை, தண்டகம், கற்பசூத்திரம், பிரம்ம ஞானம் முதலிய நூல்களை எழுதினார். கோரக்கர் வைப்பு என்பதில் சரம்பார்க்க ஆசனவிதி, சரம்பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியன பற்றி குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கோரக்கர் தியானப்பூசைக்கு

“சந்திர விழியும் மந்திரமொழியும் கொண்ட சிவபக்தரே

சாம்பலில் தோன்றிய தவமணியே விடை தெரியா

பாதையில் வீறாப்பாய் நடைபோடும் எம்மை கைபிடித்து

கரை சேர்ப்பாய் கோரக்க சித்த பெருமானே”

தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் கோரக்கர் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு ஐந்து முக விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து அல்லி, தாமரைப்பூ, சம்பங்கி மலர்களாலும் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.

அடுப்புச்சாம்பலில் தோன்றியவரே போற்றி

ஆசைகளற்ற அருளே போற்றி

உலக மக்களின் நண்பரே போற்றி

கஷ்டங்களை போக்குபவரே போற்றி

காவிதரிக்கும் ஞானஸ்கந்தரே போற்றி

சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி

புகலும், அருளும் நிறைந்தவரே போற்றி

பூலோகச் சூரியனே போற்றி

மாசற்ற மனமே போற்றி

மாயைகளை களைபவரே போற்றி

முருகக் கடவுளின் ப்ரியரே போற்றி

ஞான வழி காட்டுபவரே போற்றி

ஜீவ ஜந்துக்களை காப்பவரே போற்றி

வாக்கில் சுத்தமுடையவரே போற்றி

நிவேதனமாக வாழைப்பழம், கடுக்காய்த்தீர்த்தம், அரிசிப்பொறி, அவல், பொட்டுக்கடலையுடன் நாட்டுச்சர்க்கரை கலவை இவற்றுடன் கார்த்திகை நட்சத்திர நாள் மற்றும் சனிக்கிழமை கருநீல நிற வஸ்திரம் வைத்து வழிபடின் சிறப்பு,

தியானபூசைப்பலன்கள்

சனி கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக சனி தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். காரியங்களில் வெற்றி கிடைக்கும். படிப்பில் மந்த நிலை மாறும். நன்மக்கட்பேறு கிடைக்கும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். வீண்பயம் அகன்று தைரியம் உண்டாகும்.

“ஓம் க்லம் ஸ்ரீ கோரக்கர் சித்த சுவாமியே போற்றி”

                                         ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

 

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27103401
All
27103401
Your IP: 3.147.89.85
2024-04-28 10:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg