gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

கலியநாயனார்

Written by

19. கலியநாயனார்

திருவொற்றியூரில் எண்ணெய் வணிகம் செய்யும் வணிககுலத்தில் கலியர் பிறந்தார். மிக்க செல்வம் படைத்தவர். திருவருள் நெறியில் திளைத்தார். பெருமானுக்கு விளக்கு ஏற்றி தொண்டு புரிந்து வந்தார். அவர் வறுமையிலும் தொண்டு செய்யும் செம்மையை உலகிற்கு எடுத்துக்காட்ட அவர் செல்வம் மறைந்தது. கலியருடைய அசையும் அசையா சொத்துக்கள் அவரை விட்டு நீங்கின.

கலியர் தங்கள் உறவினர்களிடம் எண்ணெய் வாங்கி விற்று அதில் கிடைக்கும் பணத்தில் விளக்கேற்றி வந்தார். காலப்போக்கில் அவர்கள் எண்ணெய் தரமறுத்ததால் அந்த வருவாய் நின்றது. மனம் தளர்ந்தார். எண்ணெய் ஆட்டியும், செக்கு மாட்டை ஓட்டியும் வரும் கூலியைப் பெற்று தொண்டினைத் தொடர்ந்தார். தொழிலில் போட்டி ஏற்பட்டதால் தொழிலும் கிடைக்கவில்லை. வீட்டுப் பொருள்களை எல்லாம் விற்று விளக்கெரித்தார். அதுவும் தீர்ந்தது.

தன் மனைவியை பெற்று பணம் தருவோரைத்தேடினார், ஒருவரும் கிடைக்கவில்லை. படம்பக்க நாதர் கோவில் வந்தார். விளக்கிட ஒரு சாதனமும் இல்லை. விளக்கிடும் தொண்டு இல்லையெனில் நானும் இல்லை என்று அகல் விளக்குகளை வரிசையாக வைத்தார். தம் வாளை எடுத்து எண்ணெய்க்குப் பதில் தன் இரத்தத்தை நிரப்ப எண்ணி கண்டத்தை அறுத்தார்.

சிவபெருமான் தோன்றி கையைப்பிடித்து அருள் தந்தார். விடைமீது காட்சி கொடுத்தார். அவருடன் சிவபதம் அடைந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

கழற்றறிவார்நயனார் (சேரமான்)

Written by

20. கழற்றறிவார்நயனார் (சேரமான்)

சேரநாட்டில் பெருமாக்கோதையார் வாழ்ந்து வந்தார். அஞ்சைக்களம் என்ற திருத்தலத்தில் தொண்டு செய்து வந்தார். காலை புனித நீராடி திருவெண்ணீறு அணிந்து பணிசெய்து மலர்கொய்து பெருமானுக்கு மாலை சூட்டு மகிழ்ந்திருந்தார். சேரநாட்டை ஆண்ட செங்கோற்பொறையன் அரசும் அதிகாரமும் நிலையல்ல. இறைவன் திருவடியடைந்து தவஞ்செய்வதே சிறந்தது என்று கானகம் சென்றார். அடுத்த அரச உரிமையுள்ளவர் பெருமாக் கோதையர் என அறிந்து அவரிடம் பொருப்பை ஏற்க சொல்கின்றனர்.

திருத்தொண்டைவிடவா அரசபதவி இன்பம் தருவது. இறைவன் திரு உள்ளம் என்ன நினைக்கின்றது என அறிந்து செயல்பட நினைத்து இறைமுன் தொண்டு செய்ய என் உள்ளம் விரும்பினாலும் இவர்கள் அரசு பொறுப்பைத் தருகின்றார்கள். நான் எதை மேற்கொள்வது என வேண்ட இறைவன் அரசு புறத்தலே உன் கடன் என்றார். அப்படியென்றால் எல்லா உயிர்களின் துன்பத்தை நீக்குகின்ற ஆற்றலும் அவற்றை அறிகின்ற ஆற்றலும் வேண்டும் என வேண்டினார். எல்லா உயிர்களும் சொல்லுவதனைப் பெருமான் அருளால் அறியப் பெற்றமைக்கு கழறுதல் எனப்படும். எனவே கழற்றறிவார் எனப் பெயர் பெற்றார்

கழற்றறிவார்க்கு முடி சூட்டும் விழா நடந்தது. கோவிலில் பெருமானை வழிபட்டு பட்டத்து யானைமீதேறி அரண்மனை சென்றபோது எதிரில் ஓர் வண்ணான் எதிர்பட்டான் அவன் மேனியெல்லாம் உவர்மண் ஒட்டி நீறுபூசிய முனிபோல் தென்பட்டான். மன்னர் யானைமீதிருந்து கீழிறங்கி வணங்கினான். என்னை யாரோ என நினைத்துள்ளீர் நான் வண்ணான் என்றான். மன்னர் நான் அடியேன் அடிச்சேரன் என்றார். நாம் பிடிசாம்பலாவது நிச்சயம் என்ற உணர்வுடன் செயல்பட்டார் மன்னர். பெருமான் இவர்தம் வழிபாட்டினை ஏற்கும் வண்ணம் நாள்தோறும் இறைவன் பாதச்சிலம்போசை அளிப்பார். அதன்பின்னர்தான் வழிபாட்டை நிறைவு செய்து அரசுப் பணிகளில் ஈடுபடுவார்.

ஒருநாள் வழிபாடு செய்யும்போது பாதச் சிலம்பொலி கேட்கவில்லை. வழிபாட்டை இறைவன் ஏற்கவில்லை என வருத்தத்துடன் இனி நான் வாழ்ந்து என்ன பயன் என உயிர்துறக்க முற்பட்டார். அப்போது வழக்கத்துக்கு மாறாக இறைவன் வேகமாக சிலம்பொலி எழுப்பினார். சுந்தரரின் பதிகச் செஞ்சொல்லில் ஒன்றியதால் சிலம்பொலிக்க சற்றுதாமதம் ஆயிற்று என்றார்.

இறைவனை மகிழ்வித்த சுந்தரரை ஆரூரரை தில்லையில் காணத்திட்டமிட்டு பயணம் மேற்கொண்டார் சேரமான். கோவிலை அடைந்து புலனும் உளமும் ஒன்றுபெற வழிபட்டார். ‘பொன்வண்ணத்தந்தாதி’ என்ற நூலைப்பாடினார். வன்தொண்டர் திருவாரூர் சென்றார் என்பதை அறிந்து அங்கு சென்றார். வழியில் உள்ள தலங்களை வழிபட்டுச் சென்றார். சேரமான் வருவதை அறிந்த ஆரூரர் எதிர்கொண்டழைத்தார். ஆரூரரை வணங்கி வீழ்ந்தார் அடியில். வாரியெடுத்து தழுவினார் ஆரூரர். ஆரூராரை கொடுங்காளூர் அழைத்துச் சென்றார். சேரமானை ஆரூர் அழைத்துச் சென்றார் ஆரூரார். இருவரும் மாற்றி மாற்றி அவர் இங்கு வந்து தங்குவதும் இவர் அங்கு சென்று தங்குவதுமாய் இருவரின் நட்பு ஒன்றியது. இருவரும் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கி ஆரூரர் முன் ‘திருவாரூர் மும்மணிக்கோவை’ என்ற பாசுரம் பாடினார். சேரமானை அழைத்துக் கொண்டு பரவையர் இல்லம் வந்தார் ஆரூரர். நிறைகுடமும் பூமாலையும் கொண்டு வரவேற்றார் பரவையார். தன் குருநாதருடன் சரிசமமாக அமர்ந்து உணவு உண்ண அஞ்சினார் சேரமான். ஆரூரர் கைப்பற்றி சென்றார்.

இருவரும் மதுரை சென்று சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டனர். சேரமானை பாண்டியன் வரவேற்றார். பாண்டியன் சோழன்மகளை மணந்திருக்க சோழனும் அங்கிருந்தான். மூவேந்தர் புடைசூழ ஆரூரர் திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டார். வழியில் பல தலங்களை வழிபட்டு திருவாரூர் வந்தனர். சிலநாட்கள் கழித்து ஆரூரர் சேரநாடுவர வேண்டுகோள் விடுத்தான் சேரமான். இருவரும் திருவாரூரிலிருந்து புறப்பட்டு பல தலங்களை வழிபட்டு கண்டியூர் சென்றனர். காவிரியில் வெள்ளம். எதிர்கரையில் ஐயாறப்பர். பெருமானை வழிபட நினைத்த ஆரூரர் பதிகம் பாட ஆற்றுநீரை விலக்கி வழிகாட்ட ஆரூரரும் சேரமானும் ஒன்று சேர்ந்து ஐயாறப்பரை வழிபட்டனர்.

இருவரையும் வரவேற்ற சேரமக்கள் திரண்டு தோரணம் அமைத்து விழா செய்தனர். ஆரூரர் அஞ்சைக்களம் சென்று ‘முடிப்பது கங்கை’ என்று பதிகம் பாடினார். திருவாரூர் நினைவு வரவே சேரமானிடம் விடை பெற்றார். சேரமான் கொடுத்த பொன் பொருளோடு திருமுருகன் பூண்டி வந்தனர். எதிர்பாரவிதமாய் கொள்ளையர்கள் எல்லாவற்றையும் களவு செய்தனர். ஆரூரர், பெருமான் திருவருள் எப்படி இதற்கு அனுமதி தந்தது என்று வருந்தினார். திருமுருகன் பூண்டி இறைவனிடம் கோபமாக பதிகம் பாடி முடித்ததும் பூண்டி பெருமான் கொள்ளை அடித்த பொருளை எல்லாம் அவரிடம் கொடுத்தான்.

நேற்றுவரை நீவேண்டியது எல்லாம் நான் கொடுத்தேன். இன்று புதிய நட்பால் என்னை மறந்தாயோ. எனவே அதைக் கொள்ளையடித்து நான் தருவதாகவே இதனை தருகின்றேன் என்றார் இறைவன். ஆரூரர் திருவாரூர் சென்று புற்றிடம் கொண்டாரை வழிபட்டு இருந்தார். ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவஞ்சைக்களத்தில் பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான் வெள்ளை யானையை அனுப்பி சுந்தரரை அதில் ஏறி கையிலை வரும்படி பணித்தார். அப்போது தன் நண்பன் சேரமானும் உடன் இருந்தால் நன்றாயிருக்கும் என எண்ணினார். சுந்தரர் இப்படி நினைப்பது உடனே சேரமானுக்கு தேரிந்தது.. உடன் குதிரைமீதேறி திருவஞ்சைக்களம் செல்ல அங்கு சுந்தரர் ஐராவதத்தில் ஏறி விண்ணில் செல்வதைப் பார்த்தவர் தன் குதிரையின் காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத அது விண்ணென்று விண்ணில் பறந்து ஐராவதத்தை வலம் வந்து அதன் முன் சென்றது. சேரமான் ஆரூரருடன் கயிலை சென்றார். அங்கு வாயிலில் பூதகணங்களால் தடுத்து நிறுத்தப் பட்டார் சேரமான். உள்ளே சென்ற சுந்தரர் சிவபெருமானை வணங்கி சேரமான் வாயிலில் நிற்பதைத் தெரிவிக்க ஈசன் புன்னகையுடன் சேரமானை உள்ளே அழைத்தார். சுந்தர மூர்த்தி நாயனார் திருவடிகளைப் பற்றி ஐந்தெழுத்து மந்திரம் ஓதியே இங்கு வந்ததாக கூறி திருக்கயிலாய ஞான உலாப் பற்றி ஓர் கவியாகப் பாடி சிவன் மனம் குளிரவைத்தார். சிவகணநாதராகிச் சிவபெருமானின் தொண்டரானார்.

******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

கழற்சிங்கநாயனார்

Written by

21. கழற்சிங்கநாயனார்

பல்லவ குலத்தில் பிறந்தவர் கழற்சிங்கர். சிவன் திருவடியை அன்றி வேறு ஒன்றையும் அறிவில் குறிக்கோளாக கொள்ளாது நாட்டை செவ்வனே அரசு புரிந்து வந்தான். சிவனுடைய கருணையால் வடநாடு சென்று பகைத்து நின்ற வடபுல மன்னரை வென்று நவநிதிகளை கைப்பற்றி அதன் மூலம் அரனுக்கு ஆலயங்கள் திருப்பணிசெய்து நைமித்தங்கள் அமைத்து திருத்தொண்டு புரிந்து வந்தார்.

திருவாரூர் கோவிலுக்கு அரசியுடன் சென்றிருந்தார். பூங்கோயிலில் புற்றிடங்கொண்டாரை கண்ணீர் மல்கி கைகூப்பி உள்ளம் உருக தரிசனம் செய்து வழிபட்டார். அவரின் மனைவி கோவிலை வலம் வந்து பெருமைகளை ரசித்துக் கொண்டிருந்தார். வழியில் இறைவனுக்கு மலர் மாலை தொடுக்கும் மண்டபத்தில் கிடந்த ஒரு மலரை எடுத்து முகர்ந்து பார்த்ததை கண்ட செருத்துனையர் என்ற அடியவர் அவரின் செயல் சிவ அபராதம் எனக்கருதி தன்னிடமுள்ள வாளினால் நுகர்ந்த மூக்கை அறுத்து விட்டார்.

உதிரம் பெருக சோர்ந்து தரையில் வீழ்ந்து அழுது கொண்டிருந்த துனைவியரைப் பார்த்து யார் இதனைச் செய்தது எனக் கேட்ட மன்னனிடம், அங்கிருந்த செருத்துனையர், அரசே, இவர் தம்பிரானுக்குடைய மலரை எடுத்து மோந்ததால் இக்கருமம் யானே புரிந்தேன் என்றார்.

இந்தக் குற்றத்திற்கு ஏற்றதண்டனையை செய்தீரில்லை என வாளை எடுத்து மலரை எடுத்த கையன்றோ முதல் குற்றவாளி எனக் கையை வெட்டினார். கை எடுத்திருக்காவிடில் நாசி நுகர்திருக்காது என்பது அவர் எண்ணம். அவளுக்கு இத்தண்டனைவழங்காவிடில் மறுபிறப்பில் இக்குற்றத்திற்காக ஆயிரம் மடங்கு பெரிய தண்டனையை அனுபவிப்பர் அதை தவிர்க்கவே மன்னன் தண்டனை அளித்தான் என்பர். அப்போது இறைவன் தியாகராசர் காட்சி கொடுத்து மன்னனின் மாண்பு பாராட்டி துணைவியரை முன்புபோல் அருள் செய்தார். தன் தொண்டினைத் தொடர்ந்து பல ஆண்டு புரிந்து இறையடி சேர்ந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

காரிநாயனார்

Written by

22. காரிநாயனார்

திருக்கடவூரில் காரி பிறந்தார். செந்தமிழை நன்கு ஆய்ந்து அறிந்தவர். கவி பாடுவதி வல்லுநர். மூவேந்தரிடமும் சென்று சொல் விளங்க பொருள் மறைந்து நிற்கும்படி பாடி உரியையும் விளக்குவார். மன்னர்கள் மகிழ்ந்து கொடுத்த பரிசினை கொண்டுவந்து சிவபெருமானுக்கு கோவில்களில் திருப்பணி செய்தார். அடியார்க்கு உதவிசெய்தார்.

வட கயிலையை மறவாது தியானம் புரிந்தார். அந்த தொடர் தியானத்தால் சிவபெருமான் அருள் துணைபுரிய உடம்புடன் கயிலைசேர்ந்து இன்புற்றார். சுவர்கத்துக்கு சென்றவர் அங்கு ஒளி உடம்பு பெற்றார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

காரைக்கால் அம்மையார்

Written by

23. காரைக்கால் அம்மையார்

புதுவை மாநிலத்தில் காரைக்காலில் வணிகர் குடியின் தலைவர் தனதத்தரின் மகளாக புனிதவதியார் பிறந்தார். குழைந்தையாய் வீடு கட்டி விளையாடும்போது இறைவன் திருநாமத்தைச் சொல்வார். வளர்ந்து திருமணப்பருவம் அடைந்ததும் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நீதிபதி என்பவரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்வித்தார். தனது மகளுக்குத் தன் வீட்டறுகே வீடு ஒன்று தந்தார். இல்லறம் சிறப்பாக நடந்தது. புனிதவதியார் வீடுதேடிவரும் அடியார்க்கு புத்தாடைகள் கொடுத்து வழிபட்டு வந்தார். இறைவன் நம் நெஞ்சில் இருக்கின்றான் என்ற கருத்துக் கொண்டவர்.

பரமதத்தனுக்கு வணிகர் ஒருவர் இரண்டு மாங்கனியைக் கொடுக்க அதை அவர் வீட்டிற்கு அனுப்பினான். வீட்டிற்கு மாம்பழம் வந்த சிறிது நேரத்திலேயே அடியவர் ஒருவர் பசியுடன்வர அம்மையார் சாதமும் தயிருடன் மாம்பழம் ஒன்றையும் தந்துவிட்டார். அடியவர் வாழ்த்தி சென்றார்.

சிறிது நேரத்தில் பரமதத்தன் வந்தார். உணவு பரிமாரப்பட்டது, மாம்பழமும் வைக்கப்பட்டது. மாம்பழம் மிகவும் ருசியாக இருக்க கண்டவர் இன்னொரு மாம்பழத்தையும் கேட்டார், உள்ளே சென்ற புனிதவதியாருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அடியவர்க்கு கொடுத்தேன் என்றால் கணவர் கோபிப்பார் என்றும் உண்மை சொல்லாமல் இறைவனிடம் விண்ணப்பிக்க அவர் கருணைகொண்டு இன்னொரு மாம்பழம் தற புனிதவதியார் அதைக் கணவரிடம் கொடுக்கின்றார். அதைச் சாப்பிட்ட பரமதத்தன் அந்தப்பழம் முன் சாப்பிட்டதைவிட அதீத சுவையுடன் இருப்பது அறிந்து இம்மாங்கனி நான் அனுப்பியது அல்ல. இதுபோன்று எங்கும் கிடையாது. இதன் ருசியோ சிறப்பு என்றான். இது ஏது என்றான்

புனிதவதியார் பொய் உரைக்காமல் உண்மை சொன்னார். கடவுள் அருளால் கிடைத்தது என்றால் இன்னொரு கனியை வரவழை பார்க்கலாம் என்றார். அம்மையார் கண்ணீர்விட்டு, ‘ஈங்கிது அருளீரேல் என்னுரை பொய்யாம்’’ என வேண்டியபொழுது அவள் கரங்களில் ஒர் மாங்கனி வந்தது. அதை அவர் பரமதத்தனிடம் தந்தார். அக்கனி சப்பிட அல்ல, சந்தேகத்தை தீர்க்க வந்தது. வந்தபின் மறைந்தது. அதுகண்ட பரமதத்தன் புனிதவதி சாதாரணப்பெண் அல்ல தெய்வப்பெண் அவளுடன் இனி வாழமுடியாது எனத் தீர்மானித்தான்.

பொருள் ஈட்டி வருகிறேன் என சென்று பாண்டிநாட்டின் தூத்துக்குடியில் வேறொரு பெண்னை மணம் புரிந்து பெண் குழந்தை ஒன்றையும் பெற்று அதற்கு புனிதவதி என்றும் பெயரிட்டு வாழ்ந்து வந்தான், இதை  அறிந்த தனதத்தன் புனிதவதியை அங்கு அனுப்பி வைத்தான். உறவினர்களுடன் பொது இடத்தில் இருந்து கொண்டு பரமதத்தனை வரச் சொன்னார்கள். அங்கு மனைவி குழைந்தையுடன் வந்தவன் மூவரும் புனிதவதி காலில் விழுந்து இவள் தெய்வம் .அவளின் அருளைப்பெற வணங்குகிறேன். என்றான்.

இதைக்கேட்ட புனிதவதியார் இறைவா என் கணவருக்காக இவ்வுடலை தாங்கியிருந்தேன், அவரே என்னை தெய்வமாக்கியபடியால் என் உடம்பிலுள்ள சதைகள் நீக்கி பூதவடிவான சிவகணங்களுள் பேய் வடிவினை தர வேண்டினார். ஈசன் அருள் புரிந்தார். இப்பூதவடிவுடன் கயிலைசென்று கயிலை நாதனைக் கண்டு வழிபட தலையினாலே நடந்து சென்றார். அங்கு ஈசனைக் கண்டு ‘பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்‘ எனப் பாடினார். ஈசன் அம்மையே என அருள்புரிந்தார். சமயக் குரவர்கள் சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரர் ஆகியோருக்கு முன் பதிகம் என்பதால் அம்மையார் பாடியது ‘மூத்த திருப்பதிகம்’ எனப்படும்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

குங்குலிக்கலயநாயனார்

Written by

24. குங்குலிக்கலயநாயனார்

திருக்கடவூரில் கலயர் பிறந்தார். கடவூர் திருக்கோவிலில் குடியிருக்கும் பெருமான் மீது அளவுகடந்த அன்பைக் கொண்டார் கலயர். காலையும் மாலையும் பெருமானுக்கு குங்குலியம் என்ற மணப்பொருளை நெருப்பில் இட்டு தூப பணியாற்றினார். கோவில் முழுக்க சிவமணமும் குங்குலிய மணமும் நிறைந்திருந்தது.

செல்வமிக்க அந்தணர் குடியில் பிறந்தவர். சிவபெருமான் இவ்வடியவரின் திருத்தொண்டினை உலகறியச் செய்ய நினைத்தார், அதன் விளவாக கலயர் நிலங்களை விற்பனை செய்தார். வீடு மனை இவற்றின்மீது கடன் பெற்று தன் குங்குலியப் பணியை தவறாமல் செய்து வந்தார். வறுமை வாட்டியது. சுற்றமும் மனைவியும் செய்வது அறியாது திகைத்தனர். அனைவரும் பட்டினியாய் கிடந்து துன்பமுற்றனர். அதைக் காணச் சகியாத அவர் மனைவி தன் கழுத்தில் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டு தாலியைக் கழற்றி கொடுத்து அதில் நெல் வாங்கிவரச் சொன்னாள்.

கலயரும் நெல் வாங்கி வரப் புறப்பட்டார். நெல் வாங்கச் செல்லும்பொது வழியில் குங்குலிய மூட்டையுடன் வணிகன் ஒருவனைப் பார்த்தார். குங்குலியத்தைப் பார்த்தவுடன் குழைந்தைகள் மனைவி நெல் எல்லாம் மறந்தார். அருமையான குங்குலியம் இதனைப் புகைத்தால் கோவில் எப்படியிருக்கும் என எண்ணினார். வணிகரே என்னிடம் பணமில்லை அதற்குப் பதில் தங்கம் தருகிறேன் எனக்கூறியதற்கு அவ்வணிகன் சம்மதித்தான். அவ்வளவுதான் குங்குலியம் கலயரின் கைக்கு வந்தது. அப்படியே வேகமாக எடுத்துச் சென்று கோவில் பண்டாரத்தில் வைத்தார். கொஞ்சம் எடுத்து தூபம் போட்டார். பின் பசி மயக்கத்தில் மயங்கினார்.

அவ்வேளை எம்பெருமான் ஆணையினால் குபேரன் கலயர் வீட்டில் செல்வச் செழிப்பினை உருவாக்கினார். அனைவரும் பசியாறி கலயர் வருகைக்கு காத்திருந்தனர். மயங்கிய கலயர் செவியில், ‘கலயரே நீர் பசியில் இருக்கின்றீர் உம் வீடு சென்று அன்னம் உண்டு மகிழ்ந்து பின் வருக’ என்ற குரல் கேட்டு நனவிற்கு வந்தபிந்தான் தான் செய்தது நினைவிற்கு வந்தது. குழைந்தைகளின் பட்டினி நினைவுக்கு வந்தது. இருப்பினும் பெருமானின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தளர் நடையுடன் வீடு வந்து சேர்ந்தார்.

வீடு தான் விட்டு வந்த நிலையிலிருந்து மாறி செல்வ செழிப்புடன் இருப்பதக் கண்ட கலயர் வியப்புடன் மனைவியைக் கேட்க அவர் எல்லாம் இறைவன் செயல் என்றார். மேலும் அளவுகடந்த பக்தியுடன் தன் தொண்டினை செய்து வந்தார்.

அப்போது அருகில் உள்ள திருப்பனந்தாள் என்ற ஊரில் தடாகை என்ற சிவபக்தை இருந்தார். அவர் தினமும் பெருமானுக்கு குடநீர் கொண்டுவந்து உற்றி மலர்மாலை அணிவித்து வழிபட்டு வந்தார். ஒருநாள் தாடகை மலர்சூட்ட முனையும்பொழுது அவருடைய சேலை நெகிழ்ந்தது. மாலையை கீழேவைக்கவும் முடியாமல், சேலையையும் விடவும் முடியாமல் சேலையை தன் இரு முழங்கையினாலும் பிடித்துக் கொண்டு மாலை சூட்ட அம்மையார் அவஸ்திபடுவதைக் கண்ட பெருமான் அம்மையின் அன்பிற்கு இரங்கி குனிந்து மலர் மாலையை ஏற்றுக் கொண்டார். அதைக் கவனியாமல் தடாகை அம்மையார் வழிபாடு முடித்துச் சென்றுவிட்டார்.

பின்னர் வழிபாடு செய்ய வந்த அந்தணர்களும் மற்றவரும் பெருமான் சாய்ந்திருப்பதக் கண்டு பதைத்தனர். என்ன கேடு நிகழுமோ என வருத்தமுற்று மக்கள் கூடி பெருமானை நிமிர்த்த முடிவு செய்தனர். மன்னரிடம் சொன்னார்கள். அனைவரும் சேர்ந்து இரும்பு சங்கிலி, குதிரை, யானை என்று இழுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரும் அயர்ச்சியடைந்தனர். இதனைக் கேள்விப்பட்ட கலயரும் திருப்பனந்தாள் சென்றார்,

இறைவனை நிமிர்த்தும் பணியில் மன்னனும் மக்களும் ஈடுபட்டு துன்புறுவதால் அப்பணியில் தானும் ஈடுபட்டு அத்துன்பத்தை அடைய நினைத்தார். பெருமான் மீது இருந்த இரும்பு சங்கிலிகளை அகற்றச் சொன்னார். ஒரு வாழை நாறினை எடுத்தார். பெருமான் மீதும் தன் கழுத்தின் மூதும் இனைத்து பூட்டி இழுத்தார். கலயரின் கழுத்து அறுபடும் என்று பெருமான் நேரே நின்றார். பெருமான் பலத்திற்கு மசியவில்லை, அன்பிற்கு கட்டுப்பட்டார்.

கலயர் மீண்டும் கடவூர் வந்து பெருமானுக்குத் தூபத்தொண்டு பலகாலம் செய்து சிவபதம் அடைந்தார்.

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

குலச்சிறைநாயனார்

Written by

25. குலச்சிறைநாயனார்

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள மணமேற்குடி என்ற ஊரில் குலச்சிறை பிறந்தார். இறைவனைச் சென்றடைய 1.சிவலிங்கத்திருமேனியை வழிபடுதல், 2.குருவை சிவமாக வழிபடுதல், 3. அடியார்களை சிவமாக வழிபடுதல் என்ற குரு லிங்க சங்கம வழிபாட்டைனை வகுத்தனர். இதில் சிவனடியார்களை சிவமாக எண்ணி வழிபடும் நெறியில் நின்றவர் குலச்சிறையார்.

பாண்டியநாட்டில் மங்கையர்கரசியார் சைவம் வளர்க்க துணை நின்றார். சம்பந்தர் பெருமானோடு சொந்த ஊரில் சிவ வழிபாடு செய்தார், சொக்கலிங்கப் பெருமானை நாளும் வழிபட்டார்.மதுரை நின்ற சீர் நெடுமாறன் மன்னரிடம் அமைச்சராக இருந்தார். அப்போது மன்னனுக்கு வெப்ப நோய் கண்டு வருந்த குலச்சிறையார் ஞான சம்பந்தரை வரவழைத்து மன்னரை வெப்ப நோயிலிருந்து காப்பாற்றினார்.

அடியார்கள் ஒவ்வொருவராய் வந்தாலும் கூட்டமாக வந்தாலும் அவர்களை வணங்கி அன்பு குறையாமல் வேண்டியன வழங்கி தொண்டாற்றினார். ஆண்டவனைத்தவிர யாரையும் தனியாக பாடாத ஞானசம்பந்தர் குலச்சிறையாரை தம் பதிகத்தில் பாடியுள்ளதே அவரின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். பெருநம்பி எனப் பெயர் பெற்றார். அமைச்சராக பல்லாண்டு இருந்து அடியவர்களுக்குத் தொண்டு செய்து இறைவன் அடி சேர்ந்தார்.

மணல்மேல்குடி- ஜெகதீசுவர் ஆலயம்- குலச்சிறை நாயனார் சந்நிதி.

******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

 

கூற்றுவ நாயனார்

Written by

26. கூற்றுவ நாயனார்

களந்தை என்ற ஊரில் கூற்றுவனார் என்ற அடியவர் வாழ்ந்திருந்தார். பகைவர்களுக்கு எமன் போன்று இருப்பதால் கூற்றுவர் எனப் பெயர் பெற்றார். சிறந்த வாள் வலியும் தோள் வலியும் பெற்று மாவீரராக விளங்கியவர். சிற்றரசராக இருந்து பல மன்னர்களை வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். தும்பைப் பூமாலையணிந்து வெற்றி பெற்றார் இப்பல்லவ மன்னர்.

சோழர்களின் மணிமுடி தில்லை கருவூலத்தில் இருந்தது. சோழமன்னர்களுக்கு தில்லைவாழ் அந்தணர்கள் முடிசூட்டுவார்கள். சோழநாடு தன் ஆளுகைக்கு கீழ் வந்தபடியால் கூற்றுவனார் தனக்கு முடி சூட்டும்படி தில்லைவாழ் அந்தணர்களைக் கேட்டார். அவர்கள் சோழ மன்னரன்றி வேறு யாருக்கும் முடி சூட்டமாட்டோம் என்றனர். தீட்சதர்கள் தங்கள் மரபில் வந்த ஒருவரிடம் மகுடத்தைக் கொடுத்து சேரநாடு சென்றனர். கூற்றுவனார் அதிகாரத்தைப் பயன் படுத்தி மகுடம் சூட்ட விரும்பவில்லை.

கூத்தபிரானிடத்தில் உன்னுடைய திருமுடியையே மணிமுடியாக சூட்டி அருள் புரிய வேண்டினார். இறைவன் அவரது கனவில் தோன்றி தலைமீது திருவடியைச் சூட்டி அருள் புரிந்தார். கூற்றுவனாரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அரசு செல்வத்தை பெருமான் கருணையினால் கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்து இறைப்பணிக்கும் அடியவர் பணிக்கும் பயன்படுத்தி தொண்டு செய்து இறையடி எய்தினார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

கோச்செங்கட்சோழநாயனார்

Written by

27. கோச்செங்கட்சோழநாயனார்

சோழமன்னன் சுபதேவன்- கமலவதி ஆகியோர் மழலை வேண்டி தில்லைக் கூத்தபிரானை வேண்ட இறைவன் இராணியின் கருவில் திருவானைக்காவில் பெருமானுக்கு பந்தல் இழைத்து வழிபட்ட சிலந்தி மகவாய்ச் சார்ந்தது. கரு முதிர்ந்து மகப்பேறு வேலை வந்தபோது இன்னும் ஒரு நாழிகை கழித்து குழந்தை பிறக்குமானால் மூன்றுலகம் அரசாளும் என சோதிடர்கள் கூறினார்கள்.

அச்சொல் கேட்ட கமலவதி அவ்வாறு ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறக்கும்படி என் காலைப் பிணித்து தலைகீழாக மேலே தூக்கி நிறுத்துக என்று சொல்ல அவ்வாறே செய்து ஒரு நழிகை கழித்துக் ஆண் குழந்தை பிறந்தது. காலநீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. குழந்தையைக்கண்ட தாய் என் கோச்செங்காணானோ என அழைத்து உயிர் நீக்கினாள். மன்னன் குழந்தையை வளர்த்து உரிய பருவத்தில் மணிமுடி சூட்டி தான் தவநெறியை சார்ந்து சிவலோகம் சென்றான்.

அவ்வாறு பிறந்த கோச்செங்கட் சோழர் திரு அருளினாலே முன்னைப் பிறப்பின் உணர்வோடு சைவத்திருநெறி தழைக்க நாட்டில் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டும் திருப்பணியை மேற்கொண்டார். வெண்ணாவல் மரத்தினூடே பெருமான் வீற்றியிருந்தருளும் நிலையில் அதனை கோவிலாக மாற்றினார். சோழநாட்டில் சிவபெருமான் திருக்கோவில்கள் பலவற்றை அமைத்து நிகழும் பூசனைக்கு பெரும் பொருள் வகுத்து செங்கோல் ஆட்சி நடத்தினார். தமிழ் நாட்டில் எழுபது மாடக் கோவில்களைக் அமைத்தார். திருநறையூரில் திருமாலுக்கு மணிமாடம் என்ற கோவிலைக் கட்டினார். தில்லைவாழ் அந்தணர்களுக்கு திருமாளிகை கட்டுவித்து இறுதிவரை திருவடித்தொண்டு செய்து இறைவன் திருவடி அடைந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

கோட்புலிநாயனார்

Written by

28. கோட்புலிநாயனார்

திருநாடியத்தான்குடி என்ற ஊரில் வேளான் குடியில் கோட்புலியார் பிறந்தார். சோழமன்னனின் சேனாதிபதியாக பல போர்முனைகளுக்குச் சென்று வெற்றி பெற்று புகழடைந்தவர். மன்னன் தரும் நிதிக் குவியலை சிவபெருமானுக்கு திருஅமுதுக்குரிய செந்நெல் கொடுத்து மகிந்தார். நெல்லைக் குவித்து திருக்கோவில்களில் உள்ளபெருமான் அமுது படிக்கு அளித்து மகிழ்வார்.

ஒரு சமயம் மன்னன் ஆணைபடி போர்முனைக்கு செல்ல வேண்டியிருந்தது. சிவபெருமான் அமுது படிக்காக தாம் திரும்பி வரும் அளவும் போதுமான நெல் வைத்துவிட்டு புறப்பட்டார். அப்போது குடும்பத்தினரை அழைத்து இது சிவனுக்குரியது நான் திரும்பும் வரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டினார்.

ஊரில் பஞ்சம் ஏற்பட்டது. சுற்றத்தார்கள் அமுதுபடிக்காண நெல்லை இறைவனுக்கு படைக்காமலேயே எடுத்து உண்டனர். போர்முனையில் வெற்றி பெற்று மன்னன் கொடுத்த பொற்குவியலுடன் ஊருக்கு வந்தவர் சிவனுக்குரியதை எடுத்து சுற்றத்தார் நைவேத்தியம் செய்யாமல் உண்டதையறிந்து சினம் கொண்டு உறவினர்களை அழைத்து ஒவ்வொருவராய் வெட்டிக் கொன்றான். எஞ்சியிருந்த ஒரு சின்னஞ்சிறு குழந்தையையும் வெட்ட வாளை ஓங்க காவலன் ஐயா இச்சிறுகுழந்தை என்ன செய்தது. கொல்லாதீர் என்றதற்கு இது உணவு உண்ணவில்லை. உணவு உண்ட அதன் தாயின் பாலை அருந்தியதுதான் குற்றம் எனக்கூறி வாளினால் வெட்டினார்.

சிவபெருமான் தோன்றி உன்வாளினால் வெட்டுண்ட சுற்றத்தினர் பாவத்தினின்றும் விடுபெற்று பொன்னுலகில் இன்புறுவர். நீயும் சிவபதம் அடைவாயாக என்றார்.

                           ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27084452
All
27084452
Your IP: 3.140.185.147
2024-04-26 12:40

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg